சூப்பர் ஸ்டாருடன் ஒரு அழகான தருணம்: நெகிழ்ச்சியுடன் சிம்ரன்..

Web Ads

தமிழ் சினிமாவில் குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி போன்ற குடும்பப் படங்கள் வரவேற்பு பெற்று வருகிறது.

அவ்வகையில், ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை அழைத்து பாராட்டினார் ரஜினி. அப்போது சிம்ரன் மும்பையில் இருந்ததால், அவர் ரஜினியை சந்திக்கவில்லை. தற்போது ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார் சிம்ரன்.

இது தொடர்பான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினியுடனான சந்திப்பு குறித்து சிம்ரன், ‘சில சந்திப்புகள் காலத்துக்கு அப்பாற்பட்டது. எங்கள் சூப்பர் ஸ்டாருடன் ஒரு அழகான தருணத்தை பகிர்ந்ததற்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ‘டூரிஸ்ட் பேமிலி’ மற்றும் ‘கூலி’ படத்தின் வெற்றிகள் இந்தச் சந்திப்பை இன்னும் சிறப்பானதாக மாற்றின’ என தெரிவித்துள்ளார்.

Web Ad 2

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்தில் ரஜினி – சிம்ரன் இணைந்து நடித்தனர். அதுவே இருவரும் இணைந்து நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் சிறிய கதாபாத்திரத்தில் தான் சிம்ரன் நடித்திருப்பார் என்பது நினைவுகூரத்தக்கது.

ரஜினி, தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நடிக்கவிருக்கும் படத்திற்கான கதையையும் பல இயக்குநர்களிடம் கேட்டு வருகிறார்.

simran has mentioned his meeting with rajinikanth with emotion
simran has mentioned his meeting with rajinikanth with emotion