ஒரு மணிநேரம் பேசாமல் அமைதியாய் இருங்களேன்: இயக்குனர் செல்வராகவன் அறிவுறுத்தல்
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், அவர் வலியுறுத்தியுள்ள விவரம் வருமாறு:
‘கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று எப்போதாவது யோசித்திருக்கோமா? கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று யோசிக்க நேரம் கிடைத்தால்தானே நாம் யோசிப்போம். பிறந்ததில் இருந்தே பேச்சுதான்.
பள்ளிக்கூடத்தில் பேச்சு, கல்லூரியில் பேச்சு, கேர்ள் ஃப்ரெண்டோடு பேச்சு, திருமணத்துக்கு பிறகு பேச்சு என ஒரே பேச்சு பேச்சு பேச்சு.
எப்போதாவது நமக்கு ஒரு திடீர் அமைதி கிடைத்தால் பேச யாருமே கிடைக்கவில்லை என்றால் நாம் என்ன செய்வோம்.
உடனே பயந்து நடுங்கி எப்போதோ பழகின நண்பருக்கு ஃபோன் செய்து, தெரிந்த பெண்ணுக்கு ஃபோன் செய்து, இல்லையென்றால் ஆஃபிஸில் இருக்கும் பெண்ணுக்கு ஃபோன் செய்து சும்மா பல மணி நேரம் பேசியே அமைதியை கண்டுகொள்வதே இல்லை.
கடவுள் நமக்கு தனிமையை கொடுத்தால்கூட அந்தத் தனிமையை நான் பயன்படுத்திக் கொள்வதே இல்லை. பேசி பேசிய முடித்திடுவோம்.
ஒரு மணிநேரம் பேசாமல் இருந்து பாருங்களேன். உங்களை சுற்றி ஹம் என்ற சத்தம் கேட்கும். இதை பலவிதமாக தனியாக இருந்து கேட்டுப்பாருங்கள்.
தனியாக பயணம், தனியாக சாப்பாடு இதையெல்லாம் செய்து பாருங்கள். இதுதான் அமைதியோட உண்மையான அர்த்தம்.
அப்படி இருந்தால், சாதாரணமாக நீங்கள் யார்கூடவும் பேச மாட்டீர்கள். பேசுவதற்கு முன்பு யோசித்து பேசுவீர்கள்” என்றார்.
இனி.. செல்வராகவன் சார், இது குறித்து உணர்வுப்பூர்வமாய் தத்துவத் தொகுப்பு வெளியிடுவாரோ.?