நடிகை விந்தியா பேச்சுக்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி: வைரலாகும் சொற்போர்
தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை விந்தியா தெரிவித்துள்ள பேச்சுக்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இது குறித்த விவரம் வருமாறு:
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘சங்கமம்’ படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை விந்தியா. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ மார்கழி திங்கள் அல்லவா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தவர்.
இதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் எதுவுமே சரியாக போகாத நிலையில், விவேக்குக்கு ஜோடியாக விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அரசியல் பக்கம் திரும்பி விட்டார்.
சினிமா நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்துள்ள நடிகை விந்தியா, விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்கவில்லை. அதிமுகவுக்கு மாற்றாக விஜய் வருகிறார் என்றால் அது வேடிக்கை தான் என கிண்டல் செய்துள்ளார்.
அரசியல் என்றால் சாதாரண விஷயம் என நினைத்து விட்டு பல பேர் கிளம்பி வந்துடுறாங்க. உலகநாயகன் கமல்ஹாசன் வரை கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுன்னு எல்லாரும் பார்த்துருப்பாங்க.
எம்ஜிஆர் மாதிரி எல்லாம் விஜய் ஆகமுடியாது. அரசியலுக்கு ரொம்பவே பொறுமை முக்கியம்.
உருவக்கேலி பண்ணுவாங்க, உடல்ரீதியான கிண்டலை சமாளிக்க வேண்டும், மன வலிமை வேண்டும். விஜய் பறந்து அடிக்கிற கில்லியா? இல்லை ஒடஞ்சு விழுகுற சுள்ளியான்னு பார்க்க காத்திருக்கிறேன் என விந்தியா கூறியுள்ளார்.
விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், பல கட்சிகளும் கடும் எதிர்ப்பை மட்டுமே தெரிவித்து வருகின்றன.
விஜய்யின் வளர்ச்சியையும் அவரது கட்சியை பார்த்து மற்றவர்களுக்கு ஏற்படும் பயத்தையுமே அது காட்டுகிறது’ என்றே தளபதி விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் பதிலடி கொடுத்து வருவது வைரலாய் தெறிக்கிறது.