Pushpa 2

‘அமரன்’ பட இயக்குனருடன் நடிகர் தனுஷ் கூட்டணி; லேட்டஸ்ட் அப்டேட்

பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக ‘அமரன்’ பட இயக்குனருடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து பார்ப்போம்.

நடிகரும் இயக்குனருமான தனுஷ் சமீபத்தில் வெளியான தனது 50-வது படம் ராயனுக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் டைரக்சன் பக்கம் திரும்பினார்.

வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் படமாக ரிலீசான ‘ராயன்’ பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் படைத்தது.

தனது 50 வது படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததில் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்தவர், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் புது முகங்களை வைத்து இயக்கி முடித்துள்ளார் தனுஷ்.

காதல் படமாக உருவாகியுள்ள ‘NEEK’ விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையில் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். சேகர் கம்முலா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில், தனுஷின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக வலைப்பேச்சு வீடியோவில் கூறப்பட்டு இருக்கிறது.

தீபாவளி ரிலீசாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அமரன்’ பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று, வசூலையும் வாரி குவித்து வருகிறது.

இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க தனுஷ் அதிரடி முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த மாஸ் அப்டேட் ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

படம், அசுரத்தனமாக வரட்டும்.!