Pushpa 2

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் எப்போது ரிலீஸ்? வெளியான புதிய தகவல்

‘தல’ அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விடாமுயற்சி எப்போது ரிலீசாகும்? என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக எழுந்துள்ளது. இது குறித்த வெளியான தகவல்கள் பார்ப்போம்..

கடந்தாண்டு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, விடாமுயற்சி திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதாக வந்த அறிவிப்பினால், அஜித் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே சென்றது.

தற்போது, பல இழுபறிக்கு பிறகு ஒருவழியாக இப்படத்தின் படப்பிடிப்பு முடிவிற்கு வந்துள்ளது. இருப்பினும் விடாமுயற்சி எப்போது வெளியாகும் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

பலரும் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் இப்படம் வெளியாகவில்லை. இருப்பினும் விடாமுயற்சி டீசராவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், இப்படம் எப்போது தான் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி வெளியாகலாம் என தெரிகின்றது. ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குட் பேட் அக்லி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகுமா? இல்லை விடாமுயற்சி வெளியாகுமா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில், அஜித் தற்போது லைகா நிறுவனத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

விடாமுயற்சி படத்தை எப்போது ரிலீஸ் செய்யலாம் என்பதை பற்றி அஜித் லைக்காவிடம் பேசியிருப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கண்டிப்பாக வெளியாகும் என தெரிகின்றது. எனவே, ஆதிக் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இம்மாதம், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் டைரி தெரிவிக்கிறது.

விடாமுயற்சி, வெற்றியாகும்.!