Pushpa 2

புனிதா சொன்ன வார்த்தை, சூர்யாவிடம் உண்மையை சொன்ன நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் வீட்டுப் பலகாரம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு என்று சொல்ல அதெல்லாம் இப்ப கடையிலேயே கிடைக்குதுப்பா என்று சுரேகா சொல்ல கரெக்டு தான் ஆனா வீட்ல செய்யற பலகாரத்துல அக்கறையும் பாசமும் அதிகமா இருக்கும் என்று சொல்லுகிறார். உடனே சுரேகா கிண்டல் பண்ணும் படி பேச சூர்யா மிரட்டுகிறார். உடனே அசோகன் நீங்க அவ்ளோ பெரிய ஆளா இருந்தா ஓங்கி ஒரு அக்காவை முகத்தில் ஒன்று வை பார்க்கலாம் என்று சொல்ல சூர்யா யோவ் மாமா நீ பண்ண முடியாது இதெல்லாம் என்ன பண்ண சொல்றியா என்று சிரிக்கிறார்.

Moondru Mudichu Serial Today Promo Update
Moondru Mudichu Serial Today Promo Update

இது மாதிரி சந்தோஷமா சிரிச்சு பேசி எவ்வளவு நாள் ஆகுது எல்லோரும் என்று சொல்ல எல்லோருமா அம்மாவே இங்க இல்ல எப்படி சொல்றீங்க என்று கேட்க நான் கூப்டுட்டா அவ தான் வரல என்று சொல்லுகிறார். பிறகு யாராவது இந்த ஸ்வீட்ட எடுத்துக் கொண்டு போய் கொடுங்க என்று சொல்லுகிறார். நந்தினி போக மறுக்க புஷ்பா அக்காவை போக சொல்லுகிறார். உடனே மாதவி நந்தினியை மிரட்ட சூரியா அவர் வாயை அடக்குகிறார். அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி வந்து உட்கார அருணாச்சலம் ஸ்வீட் சாப்பிட சொல்லி கொடுக்கிறார். உடனே சூர்யா சுந்தரவல்லி வெறுப்பேற்ற எல்லாமே டேஸ்ட்டா இருக்கு என் பொண்டாட்டியோட கை பக்குவமே வேற, என்று புகழ்ந்து தள்ளுகிறார். டெலிவரி பாய் ஒருவர் வந்து ஸ்வீட் ஆர்டர் பண்ணி இருப்பதாக புஷ்பாவிடம் கொடுக்கிறார்.

உடனே அருணாச்சலம் நம்ம வீட்டுக்கா இருக்காது என்று சொல்ல, நான் தான் ஆர்டர் பண்ண என்று சொல்கிறார் சுந்தரவல்லி. நம்ம வீட்ல தான் இவ்வளவு ஸ்வீட் இருக்கே அத்தை என்ற அசோகன் சொல்ல, அருணாச்சலம் இந்த ஸ்வீட்ட சாப்பிடாம வெளிய ஆர்டர் பண்ணி சாப்பிடறதுதானே என்று சொல்ல மானம் மரியாதை இருக்கிறவங்க யாரும் இந்த ஸ்வீட்ட சாப்பிட மாட்டாங்க என்று சொல்லுகிறார். பிறகு ஸ்வீட் பாக்ஸை ஓபன் செய்து சாப்பிட அந்த ஸ்வீட் நல்லாவே இல்லை, அருணாச்சலம் இந்த சீவீட்டை எப்படி சாப்பிடுவது என்று கேட்கிறார் உடனே அவரது நண்பருக்கு ஃபோன் செய்து நான் உன் வீட்டுக்கு தான் வரேன் மதியம் லஞ்ச் அங்க தான் சாப்பிடுவேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். போனை மறந்து செல்ல புஷ்பா போனை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறார். உடனே சுந்தரவல்லி இங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு அடிக்கடி சொல்லிக்கிட்டே இரு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

நந்தினி குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருக்க நம்ம இங்க இருக்கிற வரைக்கும் பட்ச தண்ணி கூட குடிக்க மாட்டாங்களாம் பாத்தீங்களா என்று சொல்ல, சிங்காரம் விடுமா என்று சொல்லுகிறார். உடனே அம்மாச்சி எனக்கே என்னமோ சுருக்குன்னு இருக்குற மாதிரி தான் இருந்துச்சு என்று சொல்ல சிங்காரம் என்ன பண்ண முடியும் என்று கேட்க உடனே நந்தினியின் தங்கை புனிதா அக்காவை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம் என்று சொல்லுகிறார். ரஞ்சிதா நம்ம மூணு பேரும் விளையாடலாம் என்று கூப்பிட எனக்கு அதுக்கெல்லாம் மனசு இல்ல என்று சொல்லிவிடுகிறார். அடுத்த வருஷம் தீபாவளிக்கு நீ எங்க கூட இருப்பியான்னு கூட எங்களுக்கு தெரியல இப்போ இருக்கும்போது நீ என் கூட விளையாடு என்று கூப்பிட நந்தினியும் விளையாட வருகிறார். பிறகு நந்தினி கண்ணை கட்டி விட்டு கண்ணாமூச்சி விளையாடுகின்றனர். அந்த நேரம் பார்த்து சூர்யாவும் அருணாச்சலமும் வர ஏன் நிறுத்திட்டீங்க விளையாடுங்க என்று சொல்லுகிறார்.எப்பயும் உம்முன்னு இருப்பா இப்ப சந்தோஷமா இருக்கா என்று சூர்யா கேட்க அவங்க குடும்பத்தோட இருக்கா இல்ல அதுதான் என்று சொல்லுகிறார்.

பிறகு குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு நிறைய பேர் இருக்காங்க கேம் கொஞ்சம் மாத்துவோம் என்று சொல்லி மியூசிக்கல் சார் என்று சூர்யா சொல்லுகிறார். குடும்பத்தினர் அனைவரும் மியூசிக்கல் சேர் விளையாடுகின்றனர். முதலாவதாக அசோகன் அவுட் ஆகி வெளியேறுகிறார். இரண்டாவதாக நந்தினியின் தங்கை ரஞ்சிதா அவுட் ஆகிறார். மூன்றாவதாக மாதவி, நான்காவதாக புனிதா, ஐந்தாவதாக மாதவி, என அனைவரும் அவுட் ஆக கடைசியாக சூர்யாவும் நந்தினியும் விளையாடுகின்றனர். நந்தினி சூர்யாவிற்காக விட்டுக் கொடுக்க சூர்யா இது உனக்கான சார் நீ வந்து உட்காரு என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் எல்லாரும் வின்னர் தான் எல்லாரும் சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடுவோம் என்று சொல்ல அனைவரும் டான்ஸ் ஆடுகின்றனர். உடனே புஷ்பா சுந்தரவல்லிக்கு போன் போட்டு இங்க எல்லாரும் ஆட்டம் போட்டு கூத்து அடிக்கிறாங்க உடனே வாங்க நீங்க பாத்தீங்கன்னா கொந்தளிச்சுடுவீங்க என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.

பிறகு நந்தினி குடும்பத்தினர் செம ஜாலியா இருந்துச்சு இல்லக்கா என்று சொல்ல நான் தம்பியெல்லாம் வந்து விளையாடுவார்னு எதிர்பார்க்கவே இல்லை என்று அம்மாச்சி சொல்லுகிறார். இதே மாதிரி இருந்தா எப்படி இருக்கும் என்று சொல்ல, அதுக்கெல்லாம் ஆசைப்படாத அம்மா ஆச்சு அவங்க இப்படியே தான் இருப்பாங்க என்று சொல்லுகிறார். ஆறு மாசம் வரைக்கும் தான் நான் இங்கே இருப்பேன் வந்துருவேன் என்று சொல்ல இதையே சொல்லிக்கிட்டு இருக்காத என்ற அம்மாச்சி சொல்லுகிறார்.உடனே சூர்யா சாரோட அம்மா வெளியே போயிருக்காங்க வரத்துக்குள்ள கிளம்புங்க என்று சொல்ல எதுக்கு எங்களை விரட்டிக்கிட்டே இருக்க என்று சொல்ல, போகிறப்பவே முறைச்சு கிட்ட போனாங்க வந்து என்ன பிரச்சனை பண்ணுவாங்கன்னு தெரியாது அதுக்கு தான் கிளம்ப சொல்ல என்று சொல்ல, சிங்காரமும் சரி என்று சொல்லுகிறார்.

அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் வந்து என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க, ஊருக்கு கிளம்புறத பத்தி பேசிக்கிட்டு இருக்கோம் என்று சொல்ல இன்னும் அஞ்சு நாளைக்கு இருக்கலாமே என்று சொல்ல நந்தினி, ஸ்கூல் காலேஜ் எல்லாம் இருக்கு அதனால கிளம்பறது தான் சரியா இருக்கும் என்று சொல்ல அருணாச்சலமும் சரி சாப்பிட்டாவது போங்க என்று சொல்லுகிறார். நந்தினி சமையல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். சுரேகா என்னக்கா யோசிச்சிட்டு இருக்கேன் என்று மாதவியிடம் கேட்க, இந்த கும்பல் கிளம்புனு பாத்தா இங்கேயே இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி கோபமாக வீட்டுக்குள்ளே வருகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் புனிதா சிங்காரத்திடம் அவங்க வீட்டிலேயே இருந்தாலும் ஒரு பொண்ணு இருக்கு அதுக்கு எவனோ ஒருத்தன் தாலி தாலி கட்டிருந்த விட்டு வெப்பங்களா என்று கேட்கிறார்.

நந்தினி குடும்பத்தினர் வெளியில் சாப்பிட்டுக் கொண்டிருக்க, சூர்யா அங்கு வந்து என்னாச்சு என்று கேட்க நந்தினி எங்க வீட்ல இருக்கிறவங்க உங்க வீட்டுக்கு வந்ததும் உங்க அம்மாவுக்கு புடிக்கல என்று நடந்த உண்மைகளை சொல்லிவிட சூர்யா என்ன செய்யப் போகிறார் என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update
Moondru Mudichu Serial Today Promo Update