Pushpa 2

சத்யாவை காப்பாற்றிய முத்து, கடும் கோபத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

சத்யா தற்கொலை முயற்சி செய்ய அவரை முத்து காப்பாற்றியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து இரண்டு போலீஸ் வந்து சத்யாவின் வீடு இதுதானே அவனை கூப்பிடுங்க என்று சொல்லி கேட்க அவன் இங்கே இல்லை என்று சொல்லுகின்றன. பொய் சொல்லாதீங்க இல்லன்னா உங்கள கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வைத்துவிடுவேன் என்று சொல்கிறார். அவனே முத்து இது குடும்ப பிரச்சினை சார் அவன் பணம் எடுத்தது எங்க அம்மா கிட்ட தான்,அவன அசிங்கப்படுத்துதலால இப்படி பண்ணிட்டா,சின்ன பையன் தெரியாம பண்ணிட்டான் என்றெல்லாம் சொல்ல அதெல்லாம் எங்களுக்கு தெரியாது வெளிய வந்ததுக்கு அப்புறம் அது எப்படி குடும்ப பிரச்சனையாகும் இல்லன்னா நீங்க வந்து போலீஸ் ஸ்டேஷன்ல எழுதி கொடுங்க என்று சொல்ல எழுதிக் கொடுக்கிற சார் என்று முத்து சொல்லுகிறார். நீங்க மட்டும் எழுதி கொடுத்தா பத்தாது அந்த அம்மாவும் வந்து எழுதி தரணும் என்று சொல்ல சரி என்று முத்து சம்மதிக்கிறார் பிறகு அவர்கள் அங்கிருந்து செல்ல சத்தியா இங்கே என்று கேட்கிறார்.

SiragadikkaAasai Serial Today Episode Update
SiragadikkaAasai Serial Today Episode Update

அவங்க அத்தை வந்து அடிச்சதுக்கு அப்புறம் அம்மா அவனை ரொம்ப திட்டிட்டாங்க எழுத்து வெளியே போயிட்டா, என்று சொல்ல வெளியே போக வாய்ப்பில்லை நான் வரும்போது நம்பிக்கையில தான் இருந்தது என்று சொல்லிவிட்டு வேகமாக மேலே ஓடி வருகிறார். மீனாவின் குடும்பத்தினரும் பின்னால் ஓடி வருகின்றனர். பிறகு மாடியில் ஒளிந்து கொண்டிருந்த சத்தியா இவர்களைப் பார்த்தவுடன் தற்கொலை செய்து கொள்வதாக சொல்லி சுவற்றின் மேல் ஏறி நிற்கிறார். யாரும் கிட்ட வராதீங்க குதிச்சிடுவேன் என்று சொல்ல உடனே முத்து வரலை என்று அங்கேயே நின்று விடுகிறார். மீனா, மீனாவின் அம்மா என யார் அழுது சொல்லியும் கேட்காத சத்தியா குதிக்க முடிவு செய்ய முத்து நீ ஒன்னும் பத்தாவது மாடில நிக்கல இரண்டாவது மாடியில் தான் நிக்கிற இங்க இருந்து விழுந்தா நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் நடக்காது பத்து பதினைந்து எலும்பு தான் உடையும் ஹாஸ்பிடல்ல தான் படுத்துகிட்டு இருக்கனும் என்று சொல்ல அதெல்லாம் எனக்கு தெரியாது நான் சாக தான் போறேன் என்று சொல்லி குதிக்க போக சரியான நேரத்தில் முத்து அவரை பிடித்து கீழே இறக்கி விடுகிறார். உடனே குடும்பத்தினர் அவரை கட்டிப்பிடித்து கண்கலங்கி எதுக்குடா இப்படி பண்ண என்று கேட்கின்றனர். உடனே ஜெயிலுக்கு போக மாட்டமா என்று சொல்ல முத்து நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் அனுப்பிடுவோமா என்று சொல்லி மீனா
விடம் அங்கிருந்து சத்யாவை அழைத்து வருகிறார்.

அவர்கள் இருவரும் சத்யாவை முத்துவின் நண்பர் செல்வம் வீட்டுக்கு அழைத்து வந்து யாருக்கும் தெரியாமல் தங்க வைக்கின்றனர்.நடந்த விஷயங்களை அவர்களிடம் சொல்லி போலீஸ்க்கு தெரிஞ்சா கோர்ட்டு கேஸ்ன்னு பிரச்சனை பெருசாயிடும் அவனோட படிப்புக்கு பிரச்சனை வந்துரும் இப்போதைக்கு அவனை அரெஸ்ட் பண்ண கூடாது அதுக்குள்ள நான் என்ன பண்ண முடியுமோ பண்றேன் என்று அங்கே விட்டுவிட்டு மீனாவும் முத்துவும் கிளம்பி விடுகின்றனர்.

இப்ப எதுக்கு யோசிச்சிகிட்டு இருக்க மீனா எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் என்று சொல்ல மீனா முத்துவிடம் புது ஃபோனை எடுத்து கொடுக்கிறார். இதை சந்தோஷமா கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன் ஆனா இப்படி கொடுக்க வேண்டியது ஆயிடுச்சு என்று சொன்னவுடன் ஆனா எனக்கு ஒரு சந்தேகம்ங்க இவ்ளோ நாளா நீங்க தான் இந்த வீடியோ வச்சிருந்தீங்க ஆனா அதை நீங்க வெளிய விடாமல் வெச்சி இருந்தீங்க அதுக்காக அதை டெலிட் பண்ணி இருக்கலாமே என்று சொல்ல செல்வம் வேணாம்னு சொன்னா அதுவும் எனக்கு சரின்னு பட்டுச்சு அதனால தான் டெலிட் பண்ணல அதுவும் இல்லாம என்கிட்ட போன் இருக்கிற வரைக்கும் வீடியோ ரிலீஸ் ஆகல தொலைஞ்சு அடுத்த நாளே ரிலீஸ் ஆயிருக்குன்னா யாரோ பிளான் பண்ணி பண்ணியிருக்காங்க என்று சொல்ல எனக்கு சிட்டி மேல ஒரு டவுட் இருக்கு என்று மீனா சொல்லுகிறார். முத்து இது சிட்டியோட வேலை கிடையாது கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லுகிறார். ஆனா இப்போதைக்கு அம்மா கிட்ட சொல்லி கம்ப்ளைன்ட் கொடுக்காமல் இருக்கணும் என்று சொல்ல எனக்கு அங்க வரவே புடிக்கல என்று சொல்லுகிறார் நீ எந்த தப்பும் பண்ணல என்ன, நீ தப்பு பண்ணாத அப்பயே எங்க அம்மா கத்திக்கிட்டு இருப்பாங்க இப்போ சூலத்தை எடுத்துக்கிட்டு நிப்பாங்க என்று சொல்லி எப்படி சமாளிக்க போறோம்னு தெரியல என்று சொல்லி வருகின்றனர்.

முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வந்தவுடன் விஜயா என்ன சொல்லுகிறார்?அதற்கு முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update
SiragadikkaAasai Serial Today Episode Update