சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Web Ads

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படம் வெளியீடு எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது இது குறித்து ஆர்.ஜே.பாலாஜி தெரிவிக்கையில்,

‘கருப்பு’ படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. ஆரம்பத்தில் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருந்ததால், சரியான நேரத்தில் வெளியிட முடியவில்லை. ‘கருப்பு’ படம் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.

Web Ad 2

எனது தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இருவருமே சமீபத்தில் படத்தைப் பார்த்தார்கள். அவர்களுக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. இந்த தீபாவளிக்கு முதல் பாடல் வெளியாகும். சூர்யா சார் தனது நடனத்தால் அசரடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும்’ என தெரிவித்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, நட்டி, ஷிவதா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

rj balaji about his karuppu film release
rj balaji about his karuppu film release