‘அமரன்’ சிவகார்த்தியின் மார்க்கெட், பாக்ஸ் ஆபீஸில் கிடு கிடு உயர்வு..

நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் செமையாய் ஏறியிருக்கிறது. இன்று வெளியான அமரன் படம் அவருக்கு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் பார்ப்போம்…
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் மன்னனாக மாறியுள்ளார். வெறுமனே நடிகராக மட்டும் இல்லாமல், சிவகார்த்திகேயன் தனக்குள் ஒரு நல்ல பிசினஸ் மேன் சிந்தனையைக் கொண்டிருக்கின்றார் என்று கூறும் அளவிற்கு அவரது, செயல்பாடுகள் இருக்கின்றது என்றே கூறலாம்.
டாப் லிஸ்ட்டில் இருக்கும் நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆகின்றது என்றால் அப்போதெல்லாம், தலைகாட்டாமல் இருந்து விடுகின்றார்.
அதேநேரத்தில், அதற்கு அடுத்த தரத்தில் இருக்ககூடிய நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆகின்றது என்றால், அவர்களோடு படங்களை இறக்கி, பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் வெற்றி பெற்றவராகவும் மாறிவிடுகின்றார்.
அதாவது, தனது படம் தனியே ரிலீஸ் ஆகும்போது என்னதான் கலெக்ஷன் செய்தாலும், மற்றொரு ஸ்டார் நடிகருடன் படத்தினை ரிலீஸ் செய்து அந்த நடிகரின் படத்தினை விடவும் அதிக வசூல் செய்து பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றி என்பதை சைலெண்ட்டாக பதிவு செய்து வருவதுடன், தனது மார்க்கெட்டினையும் நாளுக்கு நாள் உயர்த்தி வருகின்றார்.
சிவகார்த்திகேயன் ஒரு பிலாஃப் கொடுத்தால், உடனே அதனை மறக்கடிக்க மாபெறும் ஹிட் படத்தைக் கொடுத்து விடுகின்றார். இப்படியான நிலையில்தான் சிவகார்த்திகேயன் தற்போது ஜெயம் ரவியுடன் தீபாவளிக்கு மோதுகின்றார் என்றே கூறலாம்.
இன்று அதாவது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள, சிவகார்த்திகேயனின் அமரன் படம், இன்று ரிலீஸ் ஆகியுள்ள ஜெயம் ரவியின் பிரதர் படத்தை விடவும் அதிகப்படியான தியேட்டர்களில் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டிற்கு வெளியேவும், வெளிநாடுகளிலும் ரிலீஸ் ஆகியுள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டு பொங்கலுக்கு தனுஷ் உடன் படத்தினை ரிலீஸ் செய்து, அதில் தோல்வியைத் தவிர்த்துள்ளார் என்றே சொல்லவேண்டும். அதேபோல் இப்போது தீபாவளிக்கு ஜெயம் ரவி உடன் படத்தினை ரிலீஸ் செய்துள்ளார்.
படத்தினை வெளிநாடுகளில் பார்த்த ரசிகர்கள், அமரன் படம் பாக்ஸ் ஆஃபீஸில் மட்டும் இல்லாமல், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக மாறும் எனக் கூறி வருகின்றார்கள்.
ஜெயம் ரவி படத்திற்கு போதுமான அளவிற்கு பிரமோஷன் செய்யாததால், படக்குழுவினருக்கே படத்தின் மீது பெரிய அளவிற்கு நம்பிக்கை இல்லை என திரைத்துறையினர், பேசத் தொடங்கிவிட்டனர்.
இப்படி இருக்கும்போது, இன்று படத்தின் விமர்சனத்தினைப் பார்க்கும்போது, அமரன் படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக மாறும் என பேச்சுகள் இப்போதே தொடங்கியுள்ளது.
இது இந்த ஆண்டு தீபாவளி வின்னர் சிவகார்த்திகேயனின் அமரன் என திரையுலகம் முடிவு செய்துவிட்டது என பேச்சுகள் அடிபடுகின்றது.
இனி, வரிசை கட்டி வரும் வாய்ப்புகளை.. சிவகார்த்தி கவனமாய் செலக்ட் செய்து பயணித்தால் மேலும் சிறப்புதான்.!
