மோகன்லால் படத்தை தொடர்ந்து, ரஜினி படத்தை இயக்குகிறார் பிரித்விராஜ்?

ஒரே நாளில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்து விடும் என்பது திரைத்துறையில் சாதாரணம். அதற்கு ஆயத்தமாகி அலாட்டா இருப்பதுதான் மிக அவசியம். தற்போது விஷயத்திற்கு வருவோம்..

நடிகராகவும் , இயக்குனராகவும் வலம் வருபவர் பிருத்விராஜ். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது அதன் 2-ம் பாகத்தை இயக்கி இருக்கிறார்.

இந்த படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில்,மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பான் இந்திய அளவில் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.

‘எம்புரான்’ பட ரிலீஸையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பிருத்விராஜ் சந்தித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த பிருத்விராஜ் நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர்,

‘எம்புரான்’ படத்தின் டிரெய்லரை முதலில் பார்த்த நபர் நீங்கள்தான் ரஜினி சார். அதை பார்த்த பிறகு நீங்கள் கூறிய வார்த்தைகள் என் வாழ்வில் எப்போதும் நினைவுகூரத்தக்கது. அது எனக்கு மிகப்பெரிய விஷயம். எப்போதும் உங்களின் ரசிகன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

பிரித்வி இயக்கிய ‘எம்புரான்2’ படம் செம ஹிட்டாகி ரஜினி் சாரும் பார்த்து பாராட்டி ‘எனக்கேத்த மாதிரி கதை இருந்தா சொல்லுங்க’ அப்டின்னா.? அதனால, யாதுக்கும் பிரித்வி ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்து கொள்வது சிறப்பு.!

prithviraj meets actor rajinikanth