கர்மா சும்மா விடாது: தனுஷ் மீது நயன்தாரா மறைமுகமாய் சாபம்?
தனுஷை, நயன்தாரா கடுமையாக சபித்து பதிவு போட்டிருப்பதாக, இணையதளவாசிகள் கருத்து தெரிவிப்பது வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையாளர் தனுஷ். அதேபோல், மிகச் சிறந்த நடிகை நயன்தாரா. இந்நிலையில், முன்னதாக தனுஷின் எச்சரிக்கையையும் மீறி ‘நானும் ரெளடி தான்’ படத்தின் மேக்கிங் காட்சிகளை தனது திருமண ஆவணப்படத்தில் சேர்த்திருந்தார் நயன்.
இது தொடர்பாக தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அனுமதி கேட்காமல் நானும் ரெளடி தான் பட காட்சிகளை பயன்படுத்திய நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது தனுஷ் தரப்பு.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து நயன்தாரா பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இச்சூழலில், தற்போது தனுஷ் தன் மீது வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அவரை மறைமுகமாக தாக்கும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றைப் போட்டுள்ளார். அதில்
‘நீங்கள் பொய் சொல்லி ஒருவரின் வாழ்க்கையை அழிக்கும்போது, அதை கடனாக எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு வட்டியுடன் திரும்ப வரும்’ என கர்மா சொன்னதாக குறிப்பிட்டு, அதில் அடிக்கோடிட்டு காட்டியும் இருக்கிறார் நயன்தாரா. அவர் இந்த பதிவை போட்டிருந்தாலும், அது தனுஷை தாக்கி தான் போட்டிருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
ஏனெனில், தனுஷுக்கு சில தினங்களுக்கு முன்னர் தான் விவாகரத்து கிடைத்தது. கடந்த 2004-ம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்ட தனுஷ், கடந்த 2022-ம் ஆண்டு அவரை பிரிவதாக அறிவித்தார்.
இதையடுத்து, இரண்டு ஆண்டுகளாக இவர்களது விவாகரத்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் விவாகரத்து அளித்து கோர்ட் உத்தரவிட்டது.
அதையும் விமர்சிக்கும் விதமாகதான், நயன்தாரா இன்ஸ்டாவில் மறைமுகமாக பதிவை போட்டிருக்கிறார் என இணையவாசிகள் உறுதிபட கருத்திடுவது வைரலாகி தெறிக்கிறது.