இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா? ஓட்டிங் நிலவரம் இதோ..!
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்று தகவல் வெளியாகி உள்ளது
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வாரம் முழுவதும் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் நடத்தப்பட்டது அதில் பல்வேறு பிரச்சனைகளும் வாக்குவாதங்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் ஜெஃப்ரி ஜெயித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் 10 பேர் இருக்க அதில் கடைசியில் இடத்தில் சிவக்குமார், ஆர்.ஜே ஆனந்தி, மற்றும் சாச்சனா இருக்கின்றனர். இந்த மூவரில் சாச்சனா குறைந்த ஓட்டுக்களை பெற்றுள்ளார். இந்த வாரம் டபுள் எவிக்சன் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.