Pushpa 2

அருண் மற்றும் முத்துக்குமரனிடையே ஏற்பட்ட பிரச்சனை,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 54 promo 3
biggboss tamil 8 day 54 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் அருண் மற்றும் மஞ்சரிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது அந்த வாக்குவாதம் அதிகரித்துள்ளது.

அவங்க சொன்ன வார்த்தை எனக்கு ரொம்ப கஷ்டமாயிருச்சு என்று அருண் சொல்லுகிறார். என்ன எல்லாத்தையும் ஒளிச்சு வச்சு சாப்பிடுறீங்க என்று சொன்னது எனக்கு புடிக்கல என்று சொல்ல நான் ஒளிச்சு வச்சு சாப்பிடுறீங்கல்லா கேட்கல என்று சொல்லி வாக்குவாதம் இன்னும் அதிகமாகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் மஞ்சரி அங்கிருந்து சென்று தனியாக அழுது கொண்டிருக்கிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அருண், முத்துக்குமரனிடம் முத்து எல்லோரோட மூளையும் சலவை செய்றீங்க என்று ஒன்று வருதுன்னா, எல்லாரும் ஃபீல் ஆகி இருக்காங்கன்னு தானே அர்த்தம். பேச்சுத் திறமையை வச்சு ஒரு சீசனம் ஜெயிச்சிடலாம்னு முடிவு பண்ணக்கூடாது என்று சொல்ல அதற்கு முத்துக்குமரன் போன சீசன் அப்படி தானே ஜெயிச்சாங்க என்று சொல்லுகிறார்.

உடனே அருண் இப்ப யாரு பர்சனலா போறா என்று கேட்டுவிட்டு சூப்பர் முத்து என்று சொல்ல முத்துக்குமரன் எக்ஸாம்பிளுக்கு சொன்னேன் என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

biggboss tamil 8 day 54 promo 3
biggboss tamil 8 day 54 promo 3