திருப்பதியில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்.!!
திருப்பதி கோவிலில் கீர்த்தி சுரேஷ் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி, ரெமோ ,பைரவா, போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம்.
சில மாதங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது.
அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் திருப்பதியில் தனது குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது திருமணம் குறித்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் பதிலளித்துள்ளார்.
அதில், அடுத்த மாதம் எனக்கு திருமணம் என்றும் திருமணம் கோவாவில் நடக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.