தனுஷுடன் ரிலேஷன்ஷிப்: மிருணாள் தாக்குர் விளக்கம்..

Web Ads

மிருணாள் தாக்குர், தான் முதல் முறையாக சித்தாந்த் சதுர்வேதியுடன் சேர்ந்து நடித்த ‘தோ தீவானே ஷெஹர் மெய்ன்’ படத்தை பிப்ரவரி 20-ந்தேதி தியேட்டர்களில் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை விளம்பரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் தனுஷுடனான காதல் மற்றும் கல்யாணம் குறித்து கேட்கப்பட்டு வருகிறது. இது பற்றி மிருணாள் கூறியதாவது,

‘நான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். சரியான நபர் என் வாழ்க்கையில் வரும்போது திருமணம் குறித்து நானே முதல் ஆளாக சோஷியல் மீடியாவில் அறிவிப்பேன்.

முன்பெல்லாம் பல காரணங்களுக்காக மக்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், தற்போது திருமணம் செய்ய வேண்டும் என விரும்பி செய்கிறார்கள். சரியான நபரை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்கள்.

நான் தற்போது யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை. ரிலேஷன்ஷிப்பில் இல்லாதபோது அது பற்றி எப்படி பேச முடியும்’ என்றார். தனுஷோ, இது போன்ற பேச்சுக்கெல்லாம் விளக்கம் அளிக்க முடியாது என அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே ரூ. 20 கோடி இழப்பீடு கேட்டு தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம். 2016-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ‘நான் ருத்ரன்’ படத்தை இயக்கி, நடிக்க ஒப்புக் கொண்டார் தனுஷ். நாகர்ஜுனா, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.

ஆனால், அந்த பட வேலை நிறுத்தப்பட்டதால் தங்களுக்கு சுமார் ரூ. 20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும், இல்லையென்றால் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது.

mrunal thakur about love and wedding amid dating rumours
mrunal thakur about love and wedding amid dating rumours