அஜித் நடிப்பில் 5-வது படம்: இயக்குநர் சிவா அப்டேட்ஸ்..

Web Ads

அஜித் தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் அஜித்.

இப்படம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு சிவா, ‘அனைத்தும் சரியாக அமையும்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். அந்தப் படம் எந்த ஜானர் என்பதை மட்டும் இப்போது ரகசியமாக வைத்திருக்கிறோம்’ என பதிலளித்துள்ளார்.

வீரம், ‘வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களில் அஜித்-சிவா இணைந்து பணிபுரிந்துள்ளனர். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

Web Ad 2

இவர்கள் மீண்டும் இணையும் புதிய படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது முடிவாகவில்லை. ஆதிக் ரவிச்சந்திரன் படம் தொடங்கியவுடன் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா கடைசியாக இயக்கிய ‘கங்குவா’ பட தோல்வியால், கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனால், அஜித்துடனான படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

actress trisha krishnan lawyer issues statement
actress trisha krishnan lawyer issues statement