புது காதலியுடன் விஜய் வர்மா; சிவ வழிபாட்டில் தமன்னா..

Web Ads

நடிகை தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். எங்கு சென்றாலும் இருவரிடமும் எப்போது திருமணம் என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதமாக இருவரும் ஜோடியாக காணப்படாததால் இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் தமன்னாவின் காதலர் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார்.

முன்னதாக தமன்னா ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ படத்தில் விஜய் வர்மாவுடன் சேர்ந்து நடித்தபோது, காதல் வயப்பட்டதாக கூறியிருந்தார். பல நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். ஆனால், அவருடன் நடித்தபோது தான் இவர் எனக்கானவர் என்பதை நான் உணர்ந்தேன் என கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இவர்களின் திருமணம் விரைவில் அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தமன்னா, விஜய் வர்மா இடையில் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இதன்பின், நடிகை பாத்திமா சனா சாய்க் என்பவரை விஜய் வர்மா காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அது வதந்தி என சொல்லப்படும் நிலையில், காதலர் தினத்தன்று தனது புதிய காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார் விஜய் வர்மா. தன் புது காதலி கையை பிடித்து இருப்பது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார்.

ட்ரோல் செய்யும் வகையில் இருக்கும் ஒரு இன்ஸ்டா கணக்கின் லிங்க்கை அதில் அவர் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில், தமன்னா, மகா சிவராத்திரியை ஈஷா யோகா மையத்தில் சிவ வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

isha yoga center tamannaah was present while vijay varma
isha yoga center tamannaah was present while vijay varma