Web Ads

சுந்தரவல்லி எடுத்த முடிவு, நந்தினியை காப்பாற்றுவாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 22-01-25
Moondru Mudichu Serial Today Promo Update 22-01-25

நேற்றைய எபிசோடில் நந்தினியை நினைத்து அம்மாச்சி கடவுளிடம் புலம்பி அழுது கொண்டிருக்க சிங்காரம் சூர்யாவிடம் என்ன பண்றது ஐயா என்று கேட்கிறார். இப்படியே அமைதியா இருந்தா ஏதாவது கேஸ் போட்டு உள்ள தள்ளிட போறாங்க என்று புலம்ப எதுக்கும் பயப்படாதீங்க நான் டாடி கிட்ட எல்லாமே சொல்லிட்டேன் அவர் இங்கதான் கிளம்பி வந்துகிட்டு இருக்காரு என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் வந்து இறங்க சிங்காரம் குடும்பத்தினர் நந்தினி வெளியில் கொண்டு வந்துருங்க என்று கெஞ்சுகின்றனர்.

உள்ள போய் பேசி பாத்தீங்களா என்று சொல்ல யாரு விட மாட்டாங்கடா டேடி என்று சொல்லுகிறார். கேஸ் ஏதாவது போட்டாங்களா என்று சொல்ல இன்னும் எதுவும் இல்ல டாடி என்று சொன்ன சரி பேசலாம் வா என்று சூர்யாவை அழைத்து செல்ல உள்ளே நந்தினியை பார்த்து அருணாச்சலம் சமாதானம் செய்கிறார். உடனே போலீஸ் வந்து நீங்க யாரு என்று கேட்க அருணாச்சலம் நான் நந்தினி ஓட மாமனார் நந்தினி ரொம்ப நல்ல பொண்ணு இப்படி எல்லாம் பண்ணி இருக்க மாட்டான் என்று சொன்னேன் நான் உங்களோட சர்டிபிகேட் எல்லாம் கேட்கல நீங்க கோர்ட்ல பேசிக்கோங்க என்று சொல்லிவிட அருணாச்சலம் லாயரை வச்சு பேசிக்கலாம் என்று வெளியே வருகின்றனர். சுதாகரின் கூட்டாளியான நகை கடைக்காரர் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி கொண்டு இருக்க சுதாகர் போன் போட்டு அவன் செத்துட்டானா இல்லையா என்று சொல்ல டாக்டர் தான் ஒன்னும் சொல்ல மாட்டாங்களே என்று சொல்லுகிறார். அவன் செத்தா தான் நந்தினி மேல கேஸ் போடுவாங்க நான் சொல்றத செய் என்று சுதாகர் அவரிடம் எதையோ சொல்லுகிறார். அவ்வளவுதானா நான் பாத்துக்குறேன் என்று அவரும் சொல்லி போனை வைக்கிறார்.

உடனே நர்ஸ் போனவுடன் பிரசிடெண்ட் மகன் பக்கத்தில் வந்த அந்த நபர் ஆக்சிஜன் மாஸ்க் எடுத்துவிட்டு அவனை மூச்சை அழுத்தி சாகடித்து விடுகிறார். உடனே நர்ஸ் வந்து பார்க்க மூச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து டாக்டரை அழைத்து வந்து பார்க்க அவர் எதுவும் செய்ய முடியாததால் வெளியில் வந்து பிரசிடென்டிடம் உங்கள் மகனை காப்பாற்ற முடியவில்லை என்று சொன்ன ப்ரெசிடென்ட் கதறி அழுது கொண்டு வந்து மகனை பார்க்கிறார். உடனே கோபப்பட்டு அந்த குடும்பத்தை சாம்பல் ஆக்காமல் என் பயனை யாரும் தொடக்கூடாது என்று சொல்லி கோபமாக ஹாஸ்பிட்டலில் இருந்து கிளம்புகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி சுதாகருடன் வந்து இறங்க அருணாச்சலம் நீ இங்கே எங்க சுந்தரவல்லி என்று கேட்க நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டுவிட்டு திட்டுகிறார்.

கோபமாக போலீஸ் ஸ்டேஷன் உள்ளே வந்த சுந்தரவல்லி போலீஸ் எல்லாரும் வந்து எங்க வீட்ல வந்து தீபாவளிக்கும் பொங்கலுக்கும் பரிசு வாங்கிட்டு போவாங்க. என் புள்ளையையும் என் புருஷனையும் போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நிக்க வச்சுட்டேன்ல. ஒரு பையனை போட்டு அடிச்சு அப்படி ஆக்கி வெச்சி இருக்கா, இவ பண்ண வேலைக்கு சூர்யா மேல கேஸ் போட்டு இருந்தா என்ன பண்ணி இருக்க முடியும் என்று கோபமாக பேச நீயே கற்பனை பண்ணாத என்று அருணாச்சலம் சொல்லுகிறார். இதெல்லாம் அவங்க குடும்பம் ஏதாவது அசிங்கப்படுகிறார்களா என்ன அவர்களுக்கு தான் எதுவுமே கிடையாது. இவர்களுக்கு ஈக்வலா போலீஸ் ஸ்டேஷன்ல வந்து பேசவே அசிங்கமா இருக்கு என்று கோபப்படுகிறார்.

இதுவரைக்கும் உன்னைப்போனா போகுதுன்னு விட்டேன் ஆனால் உன்னை இதுக்கு மேல நான் சும்மா விடமாட்டேன் நீ பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிச்சு ஆகணும் என்று நந்தினி பார்த்து சொல்லுகிறார். ஆனால் நந்தினி குடும்பத்தினர் அவை இந்த மாதிரி பண்ண மாட்டா, உங்களுக்கே தெரியாதா என்று சொல்ல, ஆமா மோசமான தப்பு பண்ண மாட்டா பணக்கார பையனா பார்த்து மயக்கி வலையில் மட்டும் பண்ணுவா என்று சொல்ல, உடனே சூர்யா இவங்க எதுக்கு இப்படி பேசிக்கிட்டு இருக்காங்க இவங்கள யார் இங்க வர சொன்னது என்று சொல்ல, என்ன வரணும்னு வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாரு என்று சொல்ல, நான் உன்ன பெத்தவ என்ற சொல்ல அதை நினைச்சாலே அருவருப்பா இருக்கு என்று சூர்யா பேச ஆரம்பிக்க அருணாச்சலம் கொஞ்ச நேரம் அமைதியாக இரு என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி நந்தினி குடும்பத்தை தொடர்ந்து அசிங்கப்படுத்தி பேசிக் கொண்டே இருக்க செஞ்ச தப்புக்கு திட்டுங்க செய்யாத தப்புக்கு என்ன திட்டாதீங்க என்று சொல்லி, நாங்க செருப்பாகவே இருந்துட்டு போறோம் ஆனா என்ன உங்க பையன வளைச்சு போட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னீங்க இல்ல அது மட்டும் என்று பேச அருணாச்சலம் கொஞ்ச நேரம் அமைதியா இருமா என்று நந்தினி அமைதி காக்க சொல்லுகிறார்.

உடனே நந்தினியை இந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்ற வேண்டாம் வா என்று சொல்ல நீங்க ரெண்டு பேரும் வேணா போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயே நின்னு உண்ணாவிரதம் நடத்துங்க என்று கோபப்படுகிறார். அந்தப் பையன அடிச்சது ஊரே வேடிக்கை பார்த்து இருக்கு தப்பு பண்ணலன்னு சொன்னா எப்படி என்று கேட்க அதெல்லாம் இல்ல சுந்தரவல்லி என்னமோ நடந்திருக்கு என்று சொன்ன நீயோ ரெண்டு பொண்ண பெத்தவ தானே என்று கேட்கிறார். உடனே சுந்தரவல்லி நான் இப்படி ஊர் சுத்த விடலையே என்று அசிங்கப்படுத்துகிறார் சுந்தரவல்லி.

சிங்காரம் என் பிள்ளைங்க தங்கம் வார்த்தை விடாதீங்க என்று சொல்ல நிறுத்து அசிங்கமா இருக்கு என்று பேசிக்கொண்டே போக சூர்யா இந்த இடத்தியே அசிங்கப்படுத்திக்கிட்டு இருக்காங்க தயவு செஞ்சு போக சொல்லுங்க என்று சொல்ல, நந்தினி தயவு செஞ்சு இங்க இருந்து எல்லாரும் போயிடுங்க என்று சூர்யா மற்றும் அருணாச்சலத்திடம் சொல்லுகிறார். சுந்தரவல்லி நீ ஒரு ரகம் என்றால் உன்னோட தங்கச்சி வேற ரகம் நல்ல பிரசிடெண்ட் பையனா பார்த்து என்று ஆரம்பிக்க உடனே நந்தினி அருணாச்சலம் காலில் விழுந்து எனக்கு ஜெயிலுக்கு போற கஷ்டத்தை விட இவங்க பேசுறது எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுக்குது தயவு செஞ்சு இங்க இருந்து போயிடுங்க என்று சொல்ல சூர்யா அப்படியெல்லாம் விட்டுட்டு போயிட முடியாது நந்தினி என்று சொல்லுகிறார். இந்த பிரச்சனை உங்களால வந்தது கிடையாது என்னோட தங்கச்சியால வந்தது நான் பாத்துக்குறேன் அப்படி நீங்க போலனா இந்த ஸ்டேஷனிலேயே என் உயிரை மாய்த்து கொள்வது தவிற எனக்கு வேற வழி இல்ல என்று சொல்லி கண் கலங்க இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் சூர்யாவை நீ அந்த கார்ல வந்துடு என்று சொல்ல, அவன் எதுக்கு அந்த கார்ல வரணும் என்று சுந்தரவல்லி கேட்க அப்போ அந்த கார யார் எடுத்துட்டு வருவா என்று அருணாச்சலம் கேட்கிறார்.

நான் தொறதிட்டு போய் சட்டையை தான் புடிச்சு அவன் தடுமாறி கீழே விழுந்துட்டான் அதுல சாகறதுக்கு வாய்ப்பே இல்லை சார் என்று போலீஸிடம் சொல்கிறார். உடனே போலீஸ் என்னைய பார்த்துகிட்டு இருக்க எஃப் ஐ ஆர் போடு என்று சொன்ன அதுக்கு முன்னாடி அந்த பையன் அடிச்சது யாரு கொலை பண்ணது யாருன்னு நீங்க பாக்கணும் என்று சூர்யா சொல்லுகிறார். நந்தினியை எப்படி காப்பாற்ற போகிறார் என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 22-01-25
Moondru Mudichu Serial Today Promo Update 22-01-25