மாதவி,சுரேகாவை திட்டிய அருணாச்சலம்.. நந்தினிக்கு நடந்த விபத்து, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் ஏசி சர்வீஸ் செய்ய வந்தவர்கள் அர்ச்சனா அனுப்பி வைத்த ஆட்கள் என தெரிய வருகிறது. அர்ச்சனாவிடம் அவர்கள் வீடு தான் மேடம் பணக்கார வீடு ஆனா 10 சவரன் நகையும் அம்பதாயிரம் பணம் வந்தாய் இருந்தது என்று சொல்லி ஏமாற்ற அந்த பணம் மற்றும் நகையை அர்ச்சனா வாங்கிக்கொண்டு அவர்களுக்கு பணத்தை கொடுத்து அனுப்பி வைக்கிறார். இத வச்சு உனக்கு இருக்கு என்று பிளான் போடுகிறார்.
மறுபக்கம் நந்தினி நடந்ததை எல்லாம் நினைத்து வருத்தப்பட்டு அழுது கொண்டிருக்க கருப்பன் போட்டோ முன் நின்று நான் பாட்டுன்னு நிம்மதியா அப்பா தங்கச்சிங்களோட சந்தோஷமா ஊரில் இருந்தேன் என்னை இந்த நரகத்தில் ஏன் கொண்டு வந்து விட்டிருக்க என்று அழுகிறார். இது மட்டும் இல்லாமல் யாரோ திருடிட்டு போனதுக்கு என் மேல திருட்டுப்பழி போட்டுட்டு போலீஸ் கிட்ட சொல்லி அசிங்கப்படுத்துறாங்க. அதுக்கும் மேல சூர்யா சார், அவங்க அம்மா மேல இருக்கிற கோவத்துல என்கிட்ட சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிக்கிறார் இதை பார்க்கும் போது எனக்கு அருவருப்பா இருக்கு அந்த கோவத்துல தான் நான் சரக்கு பாட்டில தூக்கிப்போட்டு ஓடச்சேன் ஆனா அதுக்கு அவர் எப்படி பேசினாரு பார்த்தல்ல என்று சொல்லி அழுகிறார்.பிறகு இனிமே கொஞ்ச நேரம் கூட இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து விட்டு நீதான் என் கூட இருக்கணும் கருப்பா என்று சொல்லி நந்தினி துணிகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து விடுகிறார்.
சூர்யா நண்பன் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க நண்பன் மனைவி காபி கொடுக்கிறார். சூர்யாவிடம் நீங்க பண்ணது தப்பு அல்ல நந்தினி மேல எதுக்கு கோவப்படுறீங்க என்று சொல்ல அவ என்னோட சரக்கு பாட்டில் மேல கை வச்சா எனக்கு கோவம் தானே வரும் என்று சொல்லுகிறார். ஆனால் நண்பன் மனைவி நீங்க ஒரு நல்ல மனுஷன் எங்களைப்போல ஒரு சிலருக்கு தான் தெரியும் ஆனால் நந்தினிக்கும் அது தெரியணும்னா. எங்கேயாவது வெளிய கூட்டிட்டு போங்க படத்துக்கு போங்க மனசு விட்டு பேசுங்க நந்தினி மனசுல காயம் அதிகமா இருக்கும் இது நீங்க இது மாதிரி நடந்துக்கிட்டா காயம் அதிகமாக தான் செய்யும் என்று சொல்லி அட்வைஸ் கொடுக்கின்றனர். உடனே மல்லிகை பூ வாங்கிட்டு போங்க என்று நண்பன் மனைவி சொல்ல பூ எதுக்கு வாங்கிட்டு போகணும் என்று கேட்கிறார் அதற்கு அவர் எங்களுக்கு கல்யாணம் ஆன புதுசுல இவரும் அப்படித்தான் எனக்கு டெய்லியும் மல்லிகைப்பூ வாங்கிட்டு வருவாரு அது இவரோட அம்மாவிற்கு பிடிக்காது இருந்தாலும் கேக்காம வாங்கிட்டு வந்து கொடுப்பார் என்று சொல்ல உடனே அப்போ மல்லிப்பூ வாங்கிட்டு வந்தால் எங்க அம்மாக்கும் பிடிக்காது அப்படித்தானே ஒரு கூடையே வாங்கிட்டு போயிடுறேன் என்று வேகமாக எழுந்து ஓடுகிறார்.
மறுபக்கம் நந்தினி சோகமாக நடந்து கொண்டு வர பைக்கில் வந்த நால்வர் நந்தினியை கிண்டல் பன்னி ரேட் என்ன என்று கேட்கின்றனர். நந்தினி எதுவும் பேசாமல் இருப்பதால் அவர்கள் கிளம்பி விடுகின்றனர். சிறிது நேரம் கழித்து இரண்டு பேர் பைக்கில் வந்து நந்தினியின் பேகை திருடி செல்கின்றனர். இதனால் நந்தினி தள்ளிவிட அவர் கீழே விழுந்து கையில் அடிபட்டு மற்றவர்கள் வந்து தூக்கி விடுகின்றனர். அதில் பணம் நிறைய இருந்ததாம்மா என்று கேட்க ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் போன் இருந்தது என்று சொல்லுகிறார். உடனே அங்கிருந்த ஒருவர் போனை கொடுத்து இதில் உங்க வீட்டில யாருக்காவது போன் பண்ணி பேசுமா என்று கொடுக்கிறார். யார் நம்பரும் தெரியாம யாருக்கு பண்றது என்று நந்தினி யோசிக்கிறார்.
பிறகு அங்கிருந்து கிளம்பி நடந்து வந்து ஒரு கோவிலில் உட்கார அங்கு பூ கட்டிக்கொண்டு இருப்பவர் என்னாச்சும்மா இந்த நேரத்துல அழுதுகிட்டு உட்கார்ந்திருக்க என்று கேட்க நந்தினி எதுவும் பேசாமல் இருக்கிறார் கொஞ்ச நேரம் பார்த்து சூர்யாவின் கார் வந்து நிற்க நந்தினி மறைந்து கொள்கிறார் சூர்யா மல்லிகைப்பூ எவ்வளவு இருக்கு என்று கேட்க, எட்டு மொழம் இருக்கு சாமிக்கா தம்பி என்று கேட்கிறார் இல்லை என்னோட பொண்டாட்டிக்கு என்று சொல்ல, உன் பொண்டாட்டிக்கு மல்லிகை பூ பிடிக்குமா அப்பா என்று கேட்க இல்ல என் பொண்டாட்டிக்கு பூ வாங்கி கொடுத்தா எங்க அம்மா டென்ஷன் ஆவாங்க அதனால தான் என்று சொல்லி வாங்க நந்தினி இதை மறைந்து நின்று கேட்கிறார். சூர்யா பூ வாங்கிக்கொண்டு சென்றவுடன் நந்தினி வெளியே சென்று ஓடி விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி நடந்து கொண்டு வர, அர்ச்சனாவின் அம்மா இந்த நேரத்துல எங்க போற என்று கேட்கிறார். பார்ட்டிக்கு என்று சொல்ல உன்னை சொல்லி தப்பில்ல உங்க அப்பா உனக்கு எடுத்து வச்சிருக்காரு என்று திட்டுகிறார்.
மறுபக்கம் நந்தினி வீட்டில் இல்லாததால் அருணாச்சலம் ஏதோ என் சொல்லுக்கு கட்டுப்பட்டு இங்கே இருந்தா நீங்க பண்ண டார்ச்சர்ல எங்கேயோ போயிட்டா என்று திட்டுகிறார். நந்தினி வரும் வழியில் அந்த ஏசி சர்வீஸ் செய்த இரண்டு பேரை பார்த்து திருட்டு பசங்களா என்று கத்திக் கொண்டே வர அந்த நேரம் பார்த்து கார் வந்து மோதிவிடுகிறது.
இதனால் நந்தினி மயங்கி கீழே விழுந்து விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.