மீனா மீது பழி போட்ட முத்து, விஜயாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
மீனா மீது முத்து பழி போட, விஜயாவிற்கு அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பார்வதி வீட்டில் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க முத்து வருகிறார். அவரை வரவைத்து உட்கார வைத்த பார்வதி என்ன முத்து என்று கேட்க மீனா மேல இப்படி ஒரு பழி போட்டு இருக்கீங்களே அழுதுகிட்டே இருக்கா அத்தை எங்க அம்மா சொன்னது கூட அவளுக்கு பெருசா தெரியல ஆனா நீங்க ஒரு வார்த்தை சொன்னதுனால அவ ரொம்ப அழுதுகிட்டு இருக்கா தனியா விட்டுட்டு வர கூட எனக்கு பயமா இருக்கு. என்ன நடந்தது என்று சொல்லுங்கள் என்று கேட்க முதலில் தயங்கிய பார்வதியால் முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்றேன் நீங்க கம்ப்ளைன்ட் குடுங்க உண்மையான திருடனை கண்டுபிடிக்கலாம் என்று சொல்லுகிறார் அதற்கு பார்வதி வேணாம்பா என்று தடுத்து நிறுத்தி விடுகிறார்.
இது மட்டுமில்லாமல் அது என்னோட பணம் கிடையாது விஜயா ஓட பணம் என்பதையும் சொல்ல அம்மாவுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று கேட்கிறார். பிறகு வக்கீல் வந்த விஷயத்தையும் 2 லட்சம் கொடுத்த விஷயத்தையும் சொல்ல முத்து அதிர்ச்சி அடைகிறார். முத்து அங்கிருந்து கிளம்பி வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிடுகிறார்.
உடனே பணம் யார் எடுத்தாங்க என்பதை கண்டுபிடித்து விட்டேன் என்று சொல்ல ரோகிணி திருட்டு முழி முழிக்கிறார். யார் என்று எல்லோரும் கேட்க மீனாதான் என்று சொல்லுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியாக மீனா நீங்களா இப்படி பேசுறீங்க என்று கேட்கிறார். எல்லாரையும் நம்பி ஏமாந்து போறதே என்னோட வேலையா இருக்கு என்று மட்டும் சொல்ல அண்ணாமலை மீனா அப்படியெல்லாம் பண்ணி இருக்க மாட்டா என்று சொல்லுகிறார்.உடனே மனோஜ் மற்றும் விஜயா இருவரும் இணைந்து அதுதான் அவனே அவன் பொண்டாட்டி தான் எடுத்து இருப்பான்னு சொல்றா இல்ல நீங்க தான்பா நம்ப மாட்றீங்க என்று கேட்கிறார்.
உடனே விஜயாவும் அவன் தம்பி திருடனை மாதிரி இவளும் திருடி இருப்பா இவங்க குடும்பமே திருட்டு குடும்பம் தான் என்று பேசுகிறார். உடனே மீனா முத்துவிடம் யாருக்காகவும் என்னோட தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் நான் பணத்தை திருடல என்று கத்தி சொல்ல விஜயா என்னடி குரல் ஒசதி பேசுற வாடி என்று கூப்பிடுகிறார். உடனே அண்ணாமலைய விஜயாவை திட்டுகிறார். ரோகிணி இவ என்ன புது கதையை சொல்லிக்கிட்டு இருக்காய் என்று யோசிக்கிறார். அண்ணாமலை நீ சொல்றத நம்ப மாட்டேன் என்று சொல்ல அதற்கு முத்து நேரா பார்வதி ஆன்ட்டி வீட்டுக்கு போயிட்டு தான் பா வரேன் அம்மா மீனா மேல கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறாங்களா கொடுக்க வேணாம்னு சொல்லுப்பா என்று சொல்ல விஜயா நம்ப எப்ப அப்படி சொன்னோம் என்று முழிக்கிறார். நான் கூட காசு கொடுத்துடறேன்பா மீனா மேல கேஸ் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று சொல்லுகிறார்.
உடனே கோபப்பட்ட அண்ணாமலை மீனா மேல கேஸ் கொடுக்காம இருக்குறதுக்கு நான் ரெண்டு லட்சம் வாங்கிக் கொடுக்கணுமா அந்த கேவலமான வேலையை நான் செய்யமாட்டேன் என்று அண்ணாமலை கோபமாக கிளம்ப, உடனே அவரை தடுத்து நிறுத்தி என்னப்பா சொன்ன கேவலமான வேலைன்னு தானே சொன்ன அந்த வேலையை நம்ம வீட்ல இருக்குற ஒருத்தர் செஞ்சிருக்காங்க. என்று சொல்லுகிறார் இவ்வளவு நேரம் என் பொண்டாட்டிய பத்தி சொன்ன எல்லாமே பொய் அவ உயிரே போனாலும் அந்த மாதிரி செய்ய மாட்டா ஆனா அம்மா சத்யா மேல இருக்கிற கேஸ வாபஸ் வாங்க இரண்டு லட்ச ரூபாய் பணம் வக்கீல் கிட்ட வாங்கி இருக்காங்க என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அண்ணாமலை கேட்கப்போகும் கேள்வி என்ன? விஜயா என்ன சொல்லப் போகிறார்? வீட்டில் இருப்பவர்களின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.