தளபதி விஜய் மகன் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?
தளபதி விஜய் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் கடைசிப்படமாக – தளபதி-69′ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக உள்ள படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அது குறித்துப் பார்ப்போம்.
தளபதி விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விட்டு, முழுநேர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்துள்ள சூழலில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.
தவெக கட்சி தொடங்கிய விஜய், அண்மையில் நடத்திய கட்சியின் முதல் மாநாட்டிற்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டதால் அவரின் அரசியல் எண்ட்ரி அதகளமாக ஆரம்பமாகி உள்ளது.
விஜய்க்கு அவரது மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதற்காக அவர் பல முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டும் வந்தார். குறிப்பாக, பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஜேசன் சஞ்சய்க்காக ஒரு கதையும் தயார் செய்து வைத்திருந்தார்.
ஆனால் சஞ்சய், தனக்கு நடிப்பில் இண்டிரஸ்ட் இல்லை என சொன்னதால், அவர் விருப்பப்படி என்ன செய்ய விரும்புகிறாரோ அதையே செய்யட்டும் என விஜய்யும் விட்டுவிட்டார்.
இதனிடையே, கடந்த ஆண்டு நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குனராக அறிமுகமாக உள்ளதாகவும், அவர் இயக்க உள்ள முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகியும், இன்னும் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. அப்படத்தில் நடிக்க ஹீரோ கிடைக்காமல் திண்டாடிய ஜேசன் சஞ்சய், இறுதியாக நடிகர் சந்தீப் கிஷானை கமிட் செய்துள்ளார்.
மேலும், ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது திடீர் திருப்பமாக அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
அதனால், அவருக்கு பதிலாக விஜய் நடித்த ‘வாரிசு’ பட இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாகவும், இப்படம் குறித்த அப்டேட்டுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கு, இணையதளவாசிகள் ‘அதனாலென்ன.. தேவி ஸ்ரீ பிரசாத்தை புக் பண்ணாத வரைக்கும் டபுள் ஒகே’ என கமெண்ட் செய்து வருகின்றனர். கங்குவாவுல பட்டதை இன்னும் மறக்கல போல..!