Pushpa 2

டென்னிஸ் உலக சாம்பியன் நடால் வரலாற்றுக் கதையில் நடிக்க தனுஷ் விருப்பம்.?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

டென்னிஸ் உலக ஜாம்பவான் நடால் வரலாற்றுக் கதையில் நடிகர் தனுஷ் நடிக்க விரும்புவதாக தெரிகிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் இயக்குனர் யாரோ? என ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே கடுமையான மோதல் வெடித்து, தனுஷை தாக்கி நயன்தாரா ஒரு மிக காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது தெரிந்ததே. அதற்கு தனுஷ் தரப்பிலிருந்து பதில் வருமா? என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தனுஷ் தற்போது ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது குறித்துப் பார்ப்போம்..

தனுஷ் சினிமாவை தாண்டி கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது கிரிக்கெட் மற்றும் இதர விளையாட்டுகள் பற்றி தன் கருத்துகளை கூறி வரும் தனுஷ், பிரபல டென்னிஸ் வீரர் நடால் பற்றிய தன் கருத்துகளை பதிவிட்டுள்ளார். டென்னிஸ் உலக ஜாம்பவானாக நடால் தன் ஓய்வை அறிவித்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து, தனுஷ் தன் வலைத்தள பக்கத்தில், ‘ரொம்ப நன்றி, நீங்கள் இல்லாமல் டென்னிஸ் முன்பு போல இருக்காது’ என நடாலை குறிப்பிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த பலரும், நயன்தாராவிற்கு பதில் சொல்வாருன்னு பார்த்தால், இவர் அந்த விஷயத்தை கண்டுக்கவே இல்லையே, மிகவும் சாதாரணமாக இருக்காரே’ என கூறி வருகின்றனர்.

வழக்கமாகவே, நடிகர் தனுஷ் சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு பெரிதாக ரியாக்ட் செய்யமாட்டார். இதுவரை அவர் மீதான சர்ச்சைகளுக்கு தனுஷ் பதிலளித்ததும் இல்லை. அதற்கு ரியாக்ட் செய்ததும் இல்லை. அதைப்போல தற்போது நயன்தாரா விவகாரம் தொடர்பாகவும் தனுஷ் எந்த பதிலும் வழங்கவில்லை.

நயன்தாரா காட்டமாக அறிக்கை வெளியிட்டும், தனுஷ் அமைதி காப்பது ஏன் ? என சிலர் கேட்டு வருகின்றனர். இருப்பினும், தனுஷ் அமைதி காப்பதுதான் சரியாக இருக்கும். தனுஷும் பதில் பேசினால், இந்த பிரச்சினை மேலும் அதிகமாகிக்கொண்டு தான் போகும் என்பது பலரது கருத்தாக உள்ளது.

இந்நிலையில், தனுஷ் நடித்து வரும் குபேரா, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே பிப்ரவரி மாதம், தனுஷ் இயக்கி வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படமும் வெளியாவதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, ஏப்ரல் மாதம் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியே, டென்னிஸ் ஜாம்பவான் நடால் கதாபாத்திர வரலாற்றுக்கதையும் வருமோ? டைரக்டர் யாரோ? என்ற ஆவலும் ரசிகர்களிடையே மேலிடுகிறது. அவ்வகையில், தனுஷின் ஆடுகளத்தை பொறுத்திருந்து பார்ப்போம்.!

actor dhanush post in twit viral
actor dhanush post in twit viral