Web Ads

தனுஷ்-ஐஸ்வர்யா இருவருக்கும் சேர்ந்து வாழ சம்மதமில்லை: மனமுடைந்த ரஜினி..

தனுஷ்-ஜஸ்வர்யா இருவரும், விவாகரத்து வழக்கில் திட்டவட்டமாக எடுத்த மாறாத முடிவினால், ரஜினிகாந்த் மனம் உடைந்து காணப்படுகிறார். இந்நிலை, மகிழ்வாக மாற வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாக வருகிறது. இது குறித்து இன்று நிகழ்ந்த நிகழ்வுகள் காண்போம்..

தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும், பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை. பின்னர், வழக்கின் விசாரணை நவம்பர் 21 ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

விவாகரத்து கோரிய வழக்கில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் மூன்றாவது முறையாக ஆஜராகவில்லை என்பதால், விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

அடுத்த விசாரணைக்கு இருவரும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த மூன்று முறையும் தனுஷ்- ஐஸ்வர்யாவை ஒன்று சேர்க்க சமாதான பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அதற்கு இருவருமே உடன்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், இருவரும் இந்த முறை ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதாலும், சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்படாததாலும் இன்று ஐஸ்வர்யா கோர்ட்டில் ஆஜராகினார்.

நடிகர் தனுஷ் தரப்பில், வழக்கறிஞர் கெளதம் எஸ். ராமன், ஐஸ்வர்யா தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகியிருந்தனர். ஐஸ்வர்யாவை அவருடைய வழக்கறிஞர் இளம்பாரதி உள்ளே அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், தனுஷ் படப்பிடிப்பு முடித்துவிட்டு வந்து கொண்டிருப்பதாக ஆஜராக கால அவகாசம் வேண்டும் என தனுஷ் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதை அடுத்து, பகல் 12 மணிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, தனுஷ் சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவரை வழக்கறிஞர் கௌதம் உள்ளே அழைத்துச் சென்றார்.

இருவரும் நீதிபதி சுபாதேவி முன்பு ஆஜரான நிலையில் அவர்கள் இருவரையும் தனியே பேச அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறினர்.

இதையடுத்து. இருவருமே விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதால், இருதரப்பிடமும் கையெழுத்து பெறப்பட்டு, இந்த வழக்கில் வரும் நவம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து முதலில் தனுஷும், பிறகு ஐஸ்வர்யாவும் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தனர். சேர்ந்து வாழ இருவரும் விரும்பாததால், வரும் 27-ம் தேதி தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து கிடைத்துவிடும் என்றே தெரிகிறது.

இருவருமே விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதால் நீதிமன்றம் இவர்களுக்கு, விவாகரத்து வழங்கிவிடும் எனவும், இந்த விஷயத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் மனமுடைந்து காணப்படுகின்றார் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

dhanush and aiswarya divorce case judgement date november 27
dhanush and aiswarya divorce case judgement date november 27