இந்த ஆண்டில் எதிர்பார்ப்புடன் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்த இரண்டு தமிழ் படங்கள்..!
இந்த ஆண்டில் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக ஏமாற்றத்தை கொடுத்த இரண்டு படங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே கொண்டாட்டத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான நிலையில், மக்கள் மத்தியில் கலமையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
அந்த இடத்தில் முதலாவதாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை என்றே சொல்லலாம்.
இரண்டாவதாக தற்போது நவம்பர் 14ஆம் தேதி சிறுத்தை சிவா இயக்கத்திலும் சூர்யா நடிப்பிலும் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் கங்குவா. 300 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படத்திற்காக எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே இருந்தது.
ஆனால் இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை என்றே சொல்லலாம்.
இந்த இரண்டு படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.