ஏ.ஆர்.ரகுமானின் மருமகன் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஜோடி மீண்டும் இணைகிறார்கள்..
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், மீண்டும் சைந்தவியுடன் இணைந்து வாழும் முடிவை எடுத்துள்ளாரா? என்பது குறித்து காண்போம்..
ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு தம்பதி 29-ஆண்டுகள் வாழ்ந்து, தற்போது விவாகரத்து கோரியுள்ளனர்.
முன்னதாக, ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹானாவின் மகன் ஜி.வி. பிரகாஷ், கடந்த மே மாதம் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தனர். திருமணம் ஆகி 11 வருடங்களுக்கு பின்னர் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி பிரியும் போதே ‘இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம்’ என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, விவாகரத்து பெரும் ஒவ்வொரு ஜோடியும், இனிமேல் நாங்கள் நண்பர்களாக இருப்போம் என கூறினாலும், அப்படி இருப்பது இல்லை. தங்களுடைய வாழ்க்கையை பார்த்துக் கொண்டு நகர்ந்து சென்று விடுகிறார்கள். ஆனால், ஜி.வி.பிரகாஷ் சைந்தவி ஜோடி விவாகரத்துக்கு பின்னரும் சிறந்த நண்பர்களாக இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
அதாவது, அடுத்த மாதம் 7-ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ‘செலிபிரேஷன் ஆஃப் லைஃப்’ என்ற பெயரில் ஜி.வி. பிரகாஷ் நடத்தும் இசை கச்சேரியில் ஜி.வி. கேட்டு கொண்டதால், சைந்தவி பாட உள்ள தகவலை அவரே கூறியுள்ளார்.
விவாகரத்தை பொருட்படுத்தாது, இசைக்காக மீண்டும் அவர்கள் இணையவிருப்பது நல்ல விஷயம் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அதேபோல், வாழ்க்கையிலும் மீண்டும் சேர்ந்துவிட வேண்டும் என கோரிக்கைகளும் இணையமெங்கும் நிரம்பி வழிகிறது.
ஆம், இசையும் இனிய குரலும் மீண்டும் இணைந்து வாழ்ந்து மகிழ வாழ்த்துவோமே.!