கண் கலங்கிய நந்தினி, ஆதரவாக நிற்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 11-04-25
நேற்றைய எபிசோடில் சூர்யா குடிபோதையில் போலீஸ் இடம் சிக்க அந்த இடத்திற்கு அர்ச்சனா வந்து இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க சூர்யா என்று கேட்க, விவேக் ட்ரிங்க் அண்ட் டிரைவ் கேஸ்ல நிக்க வச்சுட்டாங்க என்று சொல்ல அர்ச்சனா போலீஸிடம் போய் கேட்கிறார். வேணும்னா அவங்கள வரைக்கும் கூட்டிட்டு போங்க கார அனுப்ப முடியாது என்று சொல்ல அர்ச்சனா அவரது காரில் கூப்பிடுகிறார். முதலில் சூர்யா மறுக்க பிறகு விவேக் தனியாக அழைத்துச் சென்று வீட்ல ரைட் வந்து இருக்கு நீ முதல்ல என்ன ஏதுன்னு போய் பாரு என்று சொல்லி அர்ச்சனாவின் காரில் அனுப்பி வைக்கிறார்.
அர்ச்சனா பாட்டு போட அதை சூர்யா ஆப் செய்கிறார். இவ்ளோ சீக்கிரம் எதுக்கு வீட்டுக்கு போகணும்னு அர்ஜெண்டா இருக்க என்று சொல்ல அதெல்லாம் உனக்கு எதுக்கு என்று கேட்கிறார். அர்ச்சனா பேசிக்கொண்டே இருக்க தயவு செய்து நீ அந்த பாட்டு கூட போட்டு பேசாத என்று சொல்லி பாட்டை வைத்து விடுகிறார் தயவு செஞ்சு கொஞ்சம் சீக்கிரமா போ என்று சொல்லுகிறார்கள். உடனே நந்தினிய கடத்தினவங்க உங்க வீட்டுக்கு வந்தாங்கலாமே நந்தினிக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க நீ பேசாம அமைதியா போ என்று சொல்லியவுடன் சூர்யா கொஞ்ச நேரத்தில் உனக்கு இதெல்லாம் எப்படி தெரியும் யார் சொன்னது என்று கேட்க அவசரப்பட்டு கேட்டுட்டோமோ என்று அர்ச்சனா யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அர்ச்சனாவுக்கு போன் வர அதில் சூர்யா வீட்டில் ரைடு நடக்கும் விஷயத்தை சொல்ல அர்ச்சனா என்ன சூர்யா உங்க வீட்ல ரைடு நடக்கிறதா சொல்றாங்க என்று சொல்ல அதுக்காக தான் உன்ன போக சொன்னேன் சீக்கிரம் போ என்று சொல்லுகிறார்.
ரைடு முடிந்த பிறகு எதுவும் பிரச்சனை இல்லை எல்லாமே கரெக்டா இருக்கு என்று சொல்ல, அதை தானே நான் முன்னாடி இருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன் இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா எங்களுக்கு எவ்வளவு அசிங்கம் என்று கேட்கிறார். அதற்கு வந்தவர்கள் நாங்க எங்க கடமையை தான் செய்தோம் என்று சொல்ல அருணாச்சலம் கொஞ்சம் பொறுமையா நடந்திருக்கலாம் குற்றவாளி மாதிரி பண்றீங்க என்று பேசிக் கொண்டிருக்க ரேணுகா ரைடு வந்த நபரிடம் கண்ணில் பூத்தொட்டி மேலே இருக்கிறது என்று கண்ணசைத்துக் காட்ட அவருக்கு புரியாமல் இருக்கிறது உடனே அவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டு கிளம்ப ரேணுகா நம்மளே களத்தில் இறங்கிட வேண்டியதுதான் என்று முடிவு எடுத்து மேலே வந்து அவர்கள் வெளியில் வரும் நேரம் பார்த்து பூத்தொட்டியை மேலே இருந்து கீழே தள்ளி உடைக்க அதில் ஒரு வெள்ளை கவர் ஒன்று இருக்கிறது அதை திறந்து பார்த்த ஆபிஸர்ஸ் அதில் நகையை எடுத்துக்காட்டுகின்றனர். உடனே மாதவி நகையை பார்த்து இது எல்லாமே என்னோட நகமா வீட்ல இருந்து திருட்டுப் போன நகை என்று சொல்லி கையில் வாங்க ஆஃபீஸர்ஸ் நகையை வாங்குகின்றனர்.
பெரிய ஃபேமிலினு சொன்னீங்க இப்போ தொட்டியில நகையை ஒளித்து வைத்திருக்கிறீர்கள்? என்று சொல்லிவிட்டு மீதி இருக்கிற பூத்தொட்டியையும் செக் பண்ண சொல்லி அனுப்புகின்றனர். மீதி இருக்கும் இரண்டு தொட்டியை எடுத்துக் கொண்டு வந்து உடைக்க அதிலும் நகைகள் இருக்கிறது. இந்த நகைக்கலாம் பில் இருக்கா என்று கேட்க மாதவியும் சுரேகாவும் இருக்கு என்று சொல்லி எடுத்து வந்து கொடுக்கின்றனர். எல்லா பில்லும் சரிதான் ஆனால் ஏன் செடிக்குள் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை என சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர்.
அவர்கள் சென்றவுடன் திருடர்கள் வந்து திருடிட்டு போனாங்க இவ சொன்னால அந்த நகை எல்லாமே இதுல இருக்கு, என்று சொல்ல சுரேகா நான் முதலில் இருந்து சொல்லிக்கிட்டு தான் இருக்கேன் திருடனுக்கும் இவளுக்கும் சம்பந்தம் இருக்குன்னு யாருன்னா நம்பனிங்களா என்று பழியை போடுகிறார். அதற்கு நந்தினி நான் கும்பிடுற கருப்பசாமி மேல சத்தியமா இந்த நகை எப்படி இங்கு வந்தது என்று எனக்கு தெரியாது என்ற சொல்ல, அசோகன் அந்தப் பூத்தொட்டி வாங்கி நீ தானே வளர்த்த அதுக்கப்புறம் எப்படி தெரியாம போகும் என்று கேட்க நந்தினி எனக்கு தெரியாது சார் என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் அவகிட்ட நான் தான் செடி வாங்கி வளர்த்தா மனசு நிம்மதி இருக்குன்னு சொன்னேன் நேத்து வாங்கிட்டு வந்த செடில இன்னைக்கு எப்படி நகை இருக்கும் என்று கேட்க அப்போ வேற என்னன்னு சொல்ல சொல்றீங்க என்று சுந்தரவல்லி கேட்கிறார். இந்த வீட்டுக்கு திருடங்கெல்லாம் வரல இவளே திருடி பதுக்கி வச்சிருக்கா இப்ப வெளிய வந்ததுக்கு அப்புறம் நான் பண்ணலன்னு சொல்றா என்று கோபப்பட நந்தினி நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல, இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்ல, மாதவி அப்போ இந்த தொட்டிக்குள்ள நகை எப்படி வந்தது என்று கேட்கிறார். சுரேகா இதுக்கு ஏதாவது ஒரு பனிஷ்மென்ட் கொடுத்த ஆகணும் என்று சொல்ல மாதவி இந்த நகை இல்லாம எனக்கு இவ்வளவு நாளா எவ்வளவு மன உளைச்சலா இருந்தது தெரியுமா என்று சொல்லுகிறார்.
இப்ப மட்டும் இந்த தொட்டில இருக்குறது தெரியாம இருந்திருந்தா ஒரு கோடி இல்ல அம்பது லட்சம் ரூபா நகையை எடுத்துக்கிட்டு தான் போயிருப்பா என்று சொல்ல அருணாச்சலம் மாதவியை கண்டிக்க அருணாச்சலம், சுந்தரவல்லி கோபப்பட்டு இவ்வளவு திருட்டு வேலை பண்ணி மாட்டி இருக்கா அவளுக்கு போய்யா சப்போர்ட் பண்ணி அசிங்கப்படுத்திக்கிட்டு இருக்கீங்க என்று கோபப்பட்டு இவ மேல ஏற்கனவே போலீஸ் கம்ப்ளைன்ட் இருக்கு இவரை இழுத்துட்டு வாங்க போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கணும் என்று சொல்லி நந்தினியை இழுத்து வர சூர்யா அர்ச்சனா உடன் காரில் வந்து இறங்குகிறார். சூர்யா வந்தவுடன் என்ன ஆச்சு ஏன் வெளியே நிக்கிறீங்க என்று கேட்க ரைடு எல்லாம் வந்து போயிடுச்சு இப்ப பிரச்சனையே வேற என்று சொல்லி நடந்த விஷயங்களை சூர்யாவிடம் சொல்லுகிறார். உடனே சூர்யா என் நந்தினி மேல பழி போட்டு கம்ப்ளைன்ட் கொடுக்க போறாங்களா அவ பண்ண வாய்ப்பே இல்லை என்று சொல்லுகிறார். அத தாண்டா நானும் சொல்றேன் என்று அருணாச்சலம் சொல்ல நந்தினி பற்றி எனக்கு தெரியும் டாடி அவ அப்படி எல்லாம் ஒரு கேவலமான வேலை செய்ய மாட்டா வாய்ப்பே இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கு என்று சுந்தரவல்லி சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறேன்.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி இடம் நீ எதையும் திருடி இருக்க மாட்ட உன்ன நம்புறேன் உன்ன பத்தி எனக்கு தெரியும் என்று சொல்லுகிறார். உன்ன கல்யாணம் பண்ணி என்னோட தாய்க்குலத்த டார்ச்சர் பண்றேன்ல அதனால அவங்க எல்லாரும் சேர்ந்து உன்ன டார்ச்சர் பண்றாங்க.
அதுக்காக நீ எதுக்கு சோகமா உம்முன்னு அழுதுகிட்டு இருக்க நீ செய்யாத தப்பு செஞ்சதா சொன்னாங்கன்னா நீ எதிர்த்து நின்னு சண்டை போடு நான் இருக்கேன் நந்தினி என்று சொல்லுகிறார். உன் மேல தப்பு இல்லன்னா எதுக்கு அமைதியா இருக்க, அப்படியெல்லாம் இருக்காத தலையில மொளகா அரைச்சிட்டு போயிடுவாங்க நீ எல்லாத்துக்கும் அமைதியா இருந்த கோழை ஏமாளி என்று சொல்லுவாங்க உன்னை நல்ல பொண்ணு யாரு சொல்ல மாட்டாங்க என்று சொல்லிவிட்டு படுத்து விடுகிறார் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 11-04-25