Web Ads

கோபி சொன்ன வார்த்தை, சுதாகர் போடும் திட்டம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

Web Ad 2

பாக்கியாவிடமிருந்து ரெஸ்டாரன்ட் வாங்க சுதாகர் திட்டமிட்டு வருகிறார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 11-04-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 11-04-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் விஷயமாக கோபி சுதாகரை வீட்டில் சந்தித்து பேசுகிறார். அதற்கு சுதாகர் நான் பாக்கியா மேடம் கிட்ட ரெஸ்டாரன்ட் ஃபுல்லா எழுதி குடுங்கன்னு கேட்கல பேர மட்டும் தான் மாத்திக்கிறோம் என்று சொல்கிறேன் அது மட்டும் இல்லாம எல்லாமே அவங்க தான் பார்க்கப் போறாங்க எனக்கு வந்து 5 கிலோமீட்டர் ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கணும்னு ஒரு ஆசை அவ்வளவுதான் இது அவங்களுக்கு பெனிஃபிட்டா தான் இருக்கும் என்று சொல்லி கோபியிடம் பேச கோபியும் சம்மதித்து விடுகிறார். மறுபக்கம் இனியா ரெடி ஆகி கொண்டிருக்க சோகமாக இருக்கிறார். ஜெனி எதுக்கு இப்ப சோகமா இருக்க சந்தோஷமா இரு இது உன்னோட வாழ்க்கையில முக்கியமான நாள் என்று சொல்ல அம்மா வந்துட்டாங்களா என்று இனியா கேட்கிறார் இல்லை என்று சொல்ல எழில் அண்ணா வந்திருச்சா என்று கேட்கிறார் உடனே அமிர்தா வெளிய தான் இருக்காரு என்று சொல்ல அண்ணனும் கொஞ்சம் கூப்பிடுங்க என்று சொல்லுகிறார்.எழில் வந்து அழகா இருப்பதாக சொல்ல இனியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் அம்மாவோட கனவு நான் அது அந்த ரெஸ்டாரன்ட் ரெடி ஆகும்போது எத்தனை நாள் தூங்காம இருந்திருக்காங்க தெரியுமா இவங்க ரெஸ்டாரன்ட் கேக்குறது தப்பு தானே என்று சொல்ல அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் இனியா அப்பா அத பத்தி பேச தான் சுதாகர் கிட்ட போயிருக்காரு அதுக்கு ஒரு கிளாரிஃபை கிடைச்சிடும் நீ எதை நினைச்சு கவலைப்படாதே என்று சொல்ல உனக்கு இது மட்டும் தான் பிரச்சனையா என்று கேட்க ஆகாஷ் நினைச்சு வருத்தமா தான் இருக்கு என்று சொல்லுகிறார் இப்ப நீ நினைக்கிறதுனால ஒன்னும் மாறப்போவதில்லை இனியா ஆகாஷுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் கோபி பாக்கியாவிடம் சுதாகரிடம் பேசிய விஷயங்கள் பற்றி சொல்லி நேம் மட்டும் தான் மாறப்போகுது வேற ஒன்னும் பிரச்சனை இல்ல உங்க ரெஸ்டாரன்ட் கையை விட்டு போகாது நான் பாத்துக்குறேன் எதுவா இருந்தாலும் இனியா கூட கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம் என்று பேசுகிறார் உடனே ஈஸ்வரி என் பெயரில் தான் ரெஸ்டாரன்ட் இருக்குது நானே கோபப்பட வேண்டிய ஆள் அமைதியா இருக்கும்போது நீ எதுக்கு பாக்கி அப்படி பண்ணிக்கிட்டு இருக்க நீ உனக்கு இருக்குற திறமைக்கு நீ ஆயிரம் ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணுவ அதுக்கப்புறம் பண்ணிக்கிட்டு போ என்று சொல்லி பேசி பாக்கியாவுடன் அனைவரும் மண்டபத்திற்கு வருகின்றனர்.

இனியா இருக்கும் ரூமுக்கு வந்து பார்க்க இனியா அழகாக இருப்பதாக பாக்கியா திருஷ்டி பொட்டு வைக்கிறார். பிறகு அனைவரும் தேவதை மாதிரி இருக்கிற இனியா என்று சொல்லுகின்றன கொஞ்ச நேரத்தில் சுதாகர் மனைவி வந்து எப்ப வந்தீங்க என்று விசாரித்துவிட்டு போட்டோ சூட் எடுக்க பொண்ண கூப்பிடுறாங்க என்று சொல்லுகின்றனர் பிறகு வெளியில் வந்து இனியாவை போட்டோ சூட் எடுத்துக் கொண்டு இருக்க கொஞ்ச நேரத்தில் சுதாகர் நித்திஷ்ஷை அழைத்து வருகிறார். பாக்கியாவின் குடும்பத்தில் இருப்பவர்கள் நிதிஷை வரவேற்பு மேடைக்கு அழைத்துச் செல்ல நித்திஷ் இனியாவிடம் ரொம்ப அழகா இருக்க இனியா ஏற்கனவே நீ ரொம்ப அழகா இருக்க இதுல இந்த கெட்டப்பில் ரொம்ப சூப்பரா இருக்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா என்று கேட்க என்ன என்று இனியா கேட்கிறார் அழகுல மயங்கி விழுந்துட்டா புடிச்சிக்கிறியா என்று கேட்க இனியா இதுவும் பேசாமல் இருக்க கிரிஞ்சா இருக்குல்ல என்று சொல்லுகிறார். உடனே சுதாகர் நாளைக்கு ரெண்டு பேரும் நீங்க வீட்ல ஒண்ணா தான் இருக்க போறீங்க நாளைக்கு பேசிக்கலாம் கொஞ்சம் போட்டோவுக்கு போஸ் கொடுங்க என்று சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர். பாக்கியா எல்லாரும் குடும்பத்துல சந்தோஷமா இருக்காங்க என்னால யாருடன் சந்தோஷமும் கெட வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர சுதாகர் கவனித்து பாக்கியா இடம் பேச வருகிறார்.

பாக்யாவை நிற்கவைத்து ரெஸ்டாரன்ட் இனியா கிப்ட் என்ன ஆச்சு என்று கேட்கிறார். இப்ப என்ன ரெஸ்டாரன்ட் கொடுக்கலைன்னா கல்யாணத்தை நிறுத்துவேன்னு சொல்ல போறீங்களா என்று கேட்க அப்படி எல்லாம் நான் சொல்ல மாட்டேன் இது பசங்களோட வாழ்க்கை கல்யாணத்துக்கு அப்புறம் எந்த பிரச்சினையும் வரக்கூடாது இல்ல அதற்காகத்தான் என்று சொல்ல பிறகு கோபி,எழில், செழியன் , பாக்கியா அனைவரையும் நிற்க வைத்து சுதாகர் பேசுகிறார் பிறகு என்ன முடிவு எடுக்கின்றனர்? பாக்யாவின் பதில் என்ன? சுதாகர் திட்டம் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 11-04-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 11-04-25