Web Ads

மீனாவிடம் காதல் விஷயத்தை சொன்ன சீதா, ரோகினி மிரட்டி எடுக்கும் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா சந்தேகப்பட்டு கேட்க சீதா காதலிக்கும் உண்மையை சொல்லி விடுகிறார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 11-04-25
SiragadikkaAasai Serial Today Episode Update 11-04-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா அம்மாவிற்கு உட்கார வைத்து சாப்பாட்டு ஊட்டி விட அந்த நேரம் பார்த்து மீனா வருகிறார் என்ன அம்மா வழக்கம்போல சாப்பிடாம போறாங்களா என்று சொல்ல, ஆமாக்கா என்று சீதா சொல்லுகிறார் உடனே இருவரும் சேர்ந்து சந்திராவிற்கு அட்வைஸ் கொடுக்க நான் தாண்டி அம்மா நீங்க இல்ல என்று சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்புகிறார். உடனே மீனா சீதாவிடம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்லி உட்கார சொல்லுகிறார். இன்னைக்கு பஸ்ல தானே போயிட்டு வந்த எந்த ரூட்ல போன என்று சுத்தி வளைத்து கேட்க சீதா புரிந்து கொள்கிறார்.

நான் ஒருத்தர் கூட வண்டியில் போனதை பாத்துட்டு தான் அக்கா கேக்குற என்று சொல்ல ஆமாம் என்று சொல்லுகிறார். ஃப்ரண்டா கூட இருக்கலாம் என்று மீனா சொல்ல பிரெண்டு தான் ஆனா என்கிட்ட ஒரு நாள் புடிச்சிருக்குன்னு சொன்னாரு என்று சொல்ல அப்ப லவ் பண்றியா என்று கேட்கிறார் ஆமாம் என்று சீதா சொல்ல இத்தனை நாள் எதுக்கு எங்க கிட்டலாம் சொல்லல என்று மீனா கேட்கிறார் முதலில் கோபமாக இருந்த மீனா உடனே முகத்தை மாற்றி சிரிக்கிறார் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன இப்ப நீ கல்யாணம் பண்ணிக்கிறது சந்தோஷம்தான் என்று சொல்ல இன்னும் அவர்கிட்ட முடிவை ஸ்ட்ராங்கா சொல்லல அக்கா நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி இருந்தா மட்டும்தான் முடிவ சொல்லுவேன் இது மட்டும் இல்லாம உனக்கும் மாமாக்கு அம்மாவுக்கு எல்லாருக்கும் புடிச்ச மட்டும்தான் அடுத்த முடிவு என்று சொல்ல, மீனாவும் அவசரப்பட்டு முடிவெடுக்கக்கூடாது என்று சொல்லி அட்வைஸ் கொடுத்து விட்டு சம்மதம் தெரிவிக்கிறார் சீதா வீட்ல யார்கிட்டயும் சொல்லிடாத அக்கா மாமா கிட்டயும் சொல்லாத என்று சொல்ல ஆமா அவர் கிட்ட சொன்னா இப்பவே போய் பேசலாம்னு சொல்லிட்டு பாரு என்று சொல்லி சரி நான் யார்கிட்டயும் சொல்லல என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் மீனா வேலை பார்த்துக் கொண்டிருக்க முத்து வந்து கட்டிப்பிடிக்கிறார் எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க என் பொண்டாட்டி நான் கட்டிப்பிடிக்கிறேன் என்று சொல்லுகிறார் பிறகு சீதாவை பார்த்த விஷயத்தை சொல்ல பிரண்ட் ஏதோ டிராப் பண்ணிட்டு போனதாக சொன்னால் எதுவும் சொல்ல நீங்க பாத்தீங்களா என்று கேட்கிறார் இல்லை என்று சொல்ல சீதா ரொம்ப கஷ்டப்படுறாங்க என்று மீனா சொல்லுகிறார் அதற்கு முத்து சின்ன வயசுல கஷ்டப்பட்டு அதுக்கு அப்புறம் நிம்மதியா இருக்கலாம் மீனா என்று சொல்லிக் கொண்டிருக்க விஜயா வெளியில் வந்து உட்கார அந்த நேரம் பார்த்து ரோகினி வருகிறார் விஜயாவின் குரலை கேட்டு கிச்சனிலிருந்து இருவரும் வெளியே வர ரோகிணி இடம் எங்க போயிட்டு வர என்று கேட்க வேலைக்கு அன்று சொல்லுகிறார்.

எவ்வளவு சம்பளம் கொடுத்தாங்க என்று கேட்க 25 ஆயிரம் என்று ரோகினி சொன்னவுடன் பணத்தைக் கேட்கிறார் ஆனால் ரோகினி பணம் கையில் இல்லை அக்கவுண்ட்ல தான் இருக்கும் என்று சொல்ல அப்ப ஏடிஎம் கார்டு கொடு என்று கேட்கிறார் ரோகிணி வேறுவழி இல்லாமல் ஏடிஎம் கார்டை கொடுக்க பின் நம்பரையும் கேட்கிறார். உங்க பையனோட பிறந்த வருஷம் தான் என்று சொல்ல எனக்கு மூணு பசங்க இருக்காங்க எந்த பையனோடது என்று வேண்டுமென்றே கேட்க உங்க மூத்த பையனோட வருஷம் என்று சொல்ல விஜயாவும் சரியென போகச் சொல்லுகிறார் இதை பார்த்த முத்து மீனாவும் என்னங்க இவங்க இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று கேட்க இதுதான் மாமியார் கொடுமை என்று சொல்லுகிறார். இதுக்கு மேல இது மாதிரி நிறைய நடக்கும் என்று முத்து சொல்ல ரோகிணி ரூமுக்கு சென்று கோபமாக ஹேண்ட் பேக் தூக்கி விசிறி அடிக்கிறார் இதே மாதிரி விட்டா எதுவுமே பண்ண முடியாது என்று யோசிக்க மனோஜ் வீட்டுக்கு வருகிறார்.

விஜயா பக்கத்தில் வந்து உட்கார என்னட டயர்டா இருக்க என்று கேட்க வேலை அதிகம் என்று சொல்லுகிறார் அவ கடைக்கு வந்தாளா என்று கேட்க வரலாமா என்று சொல்ல நீ வெளியே எங்கேயாவது பார்த்தியா என்று கேட்க வெளியில் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டு ரூமுக்கு செல்ல ரோகினி நடக்கிறது எல்லாம் உனக்கு தெரியுதா இல்லையா மனோஜ் என்று கேட்கிறார்.

இன்னைக்கு நான் போன ஆர்டர் காசு ஆன்ட்டி கேட்டாங்க நான் இல்லன்னு சொன்ன உடனே ஏடிஎம் கார்ட் வாங்கி வச்சுட்டாங்க இதெல்லாம் தப்பு இல்லையா மனோஜ் என்று கேட்க அதற்கு மனோன் இங்க இருக்கிறவங்க இவ்ளோ பேர் பெரிய பெரிய தப்பு பண்றாங்க அதெல்லாம் ஒரு தப்பு இல்லை என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் முத்து மீனா, ஸ்ருதி ,ரவி நால்வரும் மாடியில் நின்று விஜயா நடந்து கொண்ட விஷயத்தை பற்றி பேச ரவி மனோஜை போன் போட்டு மேலே கூப்பிடுகிறார்.

ரவி மனோஜிடம் என்ன கேட்கிறார்?அதற்கு மனோஜ் பதில் என்ன? முத்து என்ன சொல்லுகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 11-04-25
SiragadikkaAasai Serial Today Episode Update 11-04-25