குட் பேட் அக்லி : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!
குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

good bad ugly movie first day collection update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 35 கோடிக்கு மேலாகவும் உலக அளவில் 65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் 100 கோடியை நெருங்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

good bad ugly movie first day collection update