கடத்தி வைக்கப்பட்டிருக்கும் நந்தினி, சூர்யா சொன்ன விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அவங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து நான் இருக்கும் போதே இப்படி பேசுறாங்க ஆனா நான் இல்லாதப்ப அவங்க எப்படி பேசி இருப்பாங்க இதுவரைக்கும் நீ என்கிட்ட எதுவுமே ஏன் சொல்லல இனிமே அவங்க ஏதாவது வேலை சொன்னா என்கிட்ட சொல்லாதீங்க நீங்களே செய்ங்க என்று சொல்லுன்னு சொல்ல அப்படி எல்லாம் என்னால சொல்ல முடியாது நான் இந்த வீட்டோட வேலைக்காரி என்று சொல்லுகிறார். நான் மட்டும் இல்ல எங்க குடும்பமே இந்த வீட்ல வேலை செய்றவங்க தான் நான் அன்னைக்கே கிளம்பி போயிருப்பேன் நீங்கதான் கையை உடைத்து நிக்க வச்சீங்க என்ன வாழவும் விடமாட்டீங்க போகவும் விடமாட்டீங்க என்று கோபப்பட சூர்யா எதுவும் பேச வேணாம் போய் படுத்துக்கோ என்று சொல்லி விட்டு சூர்யா அமைதியாக சென்று வழக்கம் போல் பாட்டிலை திறக்க முயற்சிக்கிறார். முடியாததால் சரக்கு பாட்டிலிடம் தயவு செஞ்சு தொறந்துடுடா என்று சொல்லுகிறார் இல்லனா உன்ன தூக்கி போட்டு உடைச்சிடுவேன் என்று சொல்லித் திறக்க பாட்டில் திறந்து விட சூர்யா சந்தோஷமாக இருக்கிறார்.
மறுநாள் காலையில் நந்தினி கிச்சனுக்கு சமைக்க வர கல்யாணம் ஏமா யார் எது கேட்டாலும் அமைதியாக இருப்பியா எதுவுமே பேச மாட்டியா என்று கேட்க என்ன பாத்தா என்ன சூடு சொரணை இல்லாத மாதிரி இருக்கா என்று கேட்கிறார் என்று சொல்ல நம்ம இந்த வீட்ல வேலை செய்றோம் வேலை செய்றவங்கள வீட்ல இருக்கிறவங்க பேச தான் செய்வாங்க அதுக்கு என்ன பண்ண முடியும் என்று கேட்க நீ இதையே தான் பேசிகிட்டு இருக்க வேலைக்காரர்களை யாராவது பெட்ரூம்ல தங்க வைப்பாங்களா இல்ல வேலைக்காரங்க போட்டோவை நடு வீட்டில் மாட்டி வைப்பாங்களா? நீ திருந்தவே மாட்டியா என்று அட்வைஸ் பண்ணுகிறார்.
எதுக்குன்னு நம்மளுக்கு எந்த சொத்து மேலயும் ஆசை வேண்டாம். எதுமேலயும் விருப்பம் இல்ல என்னை விட்டால் நான் இப்ப கூட போயிடுவேன் என்று சொல்ல போறேன்னு கிளம்பு நாலு சின்னையாக்கு அடிபட்டது எதுக்கு வந்த பாசம் இல்லாமலேயே வந்தேன் என்று சொல்ல நான் உங்களுக்கு அடிபட்டு இருந்தாலும் வந்து இருப்பேன் என்று சொல்லுகிறார். உடனே நந்தினி சரி நான் சாப்பாடு அரிசி போட்டு இருக்கேன் சாப்பாடு வடிச்சிடுங்க நான் கடைக்கு போயிட்டு வரேன் என்று சொல்ல நான் போயிட்டு வரேன்மா என்று கல்யாணம் சொல்லுகிறார் வேணான்னு நீங்க சாப்பாடு செய்யுங்க எனக்கு கொஞ்சம் மனசு சரியில்ல நான் நடந்து போயிட்டு வரேன் என சொல்ல நந்தினி கடைக்கு கிளம்புகிறார்.
ரொம்ப நேரம் ஆகியும் நந்தினி வராததால் கல்யாணம் போன் பண்ணி பார்க்க போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்கிறது உடனே சரி நேரிலேயே போய் பார்த்துட்டு வந்துடலாம் என முடிவு செய்து காய்கறி கடைக்கு வர அங்கு நந்தினி இல்லாமல் இருப்பதை பார்த்து கல்யாணம் பதறிப் போகிறார் கடைக்காரரிடம் நந்தினி பற்றி கேட்க அரை மணி நேரத்துக்கு முன்னாடியே போயிட்டாங்க என்று சொல்லுகிறார் எங்க போயிருக்கும் என தெரியலையே என வரும் வழிகளில் கடைகளில் விசாரித்துவிட்டு வீட்டுக்கு பதற்றத்துடன் ஓடி வர வெளியிலிருந்து மீண்டும் நந்தினிக்கு போன் போடுகிறார் மீண்டும் சுவிட்ச் ஆஃப் என வந்தவுடன் இதுக்கு மேல ஐயா கிட்ட சொல்லாம இருக்க முடியாது என்று ஐயா ஐயா என கத்திக்கொண்டே வீட்டுக்கு வந்து கூப்பிடுகிறார். என்னாச்சு கல்யாணம் என்று அருணாச்சலம் கேட்கிறார்.
கல்யாணம் பதற்றமாக நந்தினியை காணம் கடையில போய் விசாரிச்சேன் அப்பவே போயிடுச்சுன்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல போன் பண்ணியா என்று கேட்ட ஃபோன் சுவிட்ச் ஆஃப்ண்ணு வருது என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் எதுக்கு நந்தினி காய்கறி வாங்க அனுப்புறீங்க என்று கோபப்படுகிறார். உடனே சுந்தரவல்லி வந்து சந்தோஷமாக பேசுகிறார். மாதவி என்னமா பேசுறீங்க என்று கேட்க அந்த விடியா மூஞ்சி காணாம போயிட்டாளா என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி இதே சூழ்நிலைல நம்ம காணாம போயிருந்தா கூட இவ்வளவு பதட்டப்பட்டு இருக்க மாட்டாரு என்று சொல்ல, மாதவி நந்தினி கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்ல சூர்யா வருகிறார். என்னாச்சு டாடி என்ன பிரச்சனை என்று சூர்யா கேட்க கல்யாணம் நந்தினி காணாமல் போன விஷயத்தை சொல்ல, அருணாச்சலம் என்ன செய்யலாம் என்று சூர்யாவிடம் கேட்க நீங்க ரெண்டு பேரும் வேணா உண்ணாவிரதம் இருங்க சுந்தரவல்லி சொல்லுகிறார். நந்தியை பற்றி தரக்குறைவாக பேச உடனே சூர்யா இதுக்கு மேல இங்க யாரும் பேசக்கூடாது என்று கோபப்படுகிறார். அவங்க அப்பாக்கு தங்கச்சிக்கும் போன் பண்ணி பாருங்கப்பா என்று சொல்ல அருணாச்சலம் போன் பண்ணுகிறார். சிங்காரத்திற்கு போன் பண்ணி முதலில் குடும்பத்தை பற்றி விசாரிக்க சூர்யா வருகிறார்.
உடனே நந்தினி எப்படி இருக்க ஐயா அவ எப்படி இருக்க போற நீங்கதான் தங்கமா பாத்துக்க போறீங்களே என்று சொல்ல அருணாச்சலமும் நல்லாதான் இருக்கா இங்கதான் இருக்கா என்று சொல்லி சமாளிக்கிறார். என்னாச்சு வேற என்று கேட்க அங்க போகல என்று சொல்லுகிறார். அப்போ எங்க போயிருப்பா என்று யோசிக்க அருணாச்சலம் விஜிக்கு போன் போட சொல்ல சூர்யா விஜிக்கு கால் பண்ணி நந்தினி வந்தாளா என்று கேட்கிறார். விஜி இங்க வரல என்னாச்சு அண்ணா என்று கேட்ட காய்கறி வாங்க போனா இன்னும் திரும்பி வரல அதனால தான் என்று சொல்ல, என்னன்னா சொல்றீங்க ஏற்கனவே ரிசார்ட்ல ஒரு வாட்டி இது மாதிரி தான் ஆச்சு என்று பதற்றமாக சூர்யா அதெல்லாம் டென்ஷனாகாத விஜி அவ பக்கத்துல எங்கேயாவது போய் இருப்பா நான் விசாரிக்கிறேன் என சொல்லி போனை வைக்கிறார். பிறகு சூர்யா எங்க போயிருப்பா என்ற யோசிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது..
இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் நம்பிக்கை மரியாதை எல்லா அழிஞ்சிடும் கையெழுத்து போடுங்க என்று சொன்னால் சூர்யா நிறுத்துங்கள் டாடி என்று சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி என்னை யார் கடத்துறாங்க எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்று யோசிக்கிறார்.
கையெழுத்து போடாதீங்க டாடி நந்தினி வந்து போடுவா என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி டென்ஷன் ஆகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
