Web Ads

சீதா கல்யாணத்திற்கு உதவி செய்யும் குடும்பத்தினர், விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதா கல்யாணத்திற்கு குடும்பத்தினர் உதவி செய்ய, விஜயா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 03-07-25
SiragadikkaAasai Serial Today Episode Update 03-07-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி ரூமில் யோசித்துக் கொண்டிருக்கிற ரவி வந்தவுடன் எதுக்கு எப்ப பார்த்தாலும் ஏதாவது யோசிச்சிட்டு இருக்க நீ ப்ரீ மைண்டாக இருக்கவே மாட்டியா என்று கேட்கிறார் எல்லா ரெஸ்டாரன்ட் பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன் என்று சொல்ல எந்த விஷயத்தை நம்ம முழு ஈடுபாட்டோடு செய்யும்போது கஷ்டம் தெரியாது நீ தெரியாத பீல்டுல எதுக்கு உன்ன போட்டு ஸ்ட்ரஸ் ஆக்கிக்கிட்டு இருக்கு என்று சொல்லுகிறார். நீ கடைசி வரைக்கும் சம்பளம் வாங்குற ஆளாகவே இருக்க போறியா என்று கேட்க அப்படி சொல்லு சுருதி எல்லாத்துக்குமே ஒரு டைம் வரும்போது கண்டிப்பா நம்ம செய்யலாம் என்று சொல்ல நானே இப்போ இந்த வேலை எல்லாம் கொஞ்சம் ஸ்டாப் பண்ணி வைக்கப் போறேன் என்று சொல்ல ரவி சந்தோஷப்படுகிறார்.

ரொம்ப சந்தோஷம் ஸ்ருதி என்று சொன்ன ஓவரா சந்தோஷப்படாத சீதாவோட கல்யாணம் முடியுற வரைக்கும் தான் ஸ்டாப் பண்ணி வைப்பேன் என்று சொல்லிவிட்டு, சீதா நமக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணி இருக்காங்க அவங்களுக்கு ஏதாவது செய்யணும் என்று சொல்ல நான் முடிவு பண்ணிட்டேன் சமையல் வேலை ஃபுல்லா நான் தான் எடுத்து செய்யப் போறேன் அதனால முத்து கிட்ட முன்னாடியே சொல்லிடனும் என்று சொல்ல அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் என சுருதி சொல்லுகிறார் நீ ஒத்துக்கலைன்னா என்ன நான் சொல்லப் போறேன் என வெளியில் வர அண்ணாமலை வருகிறார் உடனே முத்து மீனாவை கூப்பிட வீட்டில் இருக்கும் அனைவரும் வருகின்றனர்.

மீனா கையில் பணத்தை கொடுத்து இதில் 51 ஆயிரம் இருக்கிறது என்னால் முடிந்தது கல்யாணத்துக்கு கொடுத்து இருக்கிறேன் என்று சொல்ல விஜயா எதுக்கு இவ்வளவு கொடுத்தீங்க என்று கேட்கிறார் நம்ம குடும்பம் மாதிரி தான் அதுவும் என்று சொல்ல விஜயா ஓவராக பேசுகிறார்.உடனே ரவி முத்துவிடம் சமையல் வேலை எல்லாம் நான் பாத்துக்குறேன் என்னோட ஆளுங்களை வைத்து சமைச்சுக்கிறேன் என்று சொல்ல விஜயா இன்னும் அதிர்ச்சி அடைகிறார். அவன் என் பையன் அப்படித்தான் இருப்பானு என அண்ணாமலை சொல்லுகிறார். ஆனால் சுருதி நான் இது ஒத்துக்க மாட்டேன் என சொல்ல விஜயா நீ தாம்மா கரெக்டா யோசிக்கிற என்று சொல்லி பாராட்ட முத்து மீனாவும் அதுதான் ஸ்ருதிக்கு விருப்பம் இல்ல விடு ரவி நாங்க பார்த்துக்கிறோம் என சொல்லுகின்றனர். உடனே சுருதி இவ்வளவு கம்மியா செய்ய நான் ஒத்துக்க மாட்டேன் நான் மூணு சவரன் செயின் போட போறேன் என சொல்ல விஜயா கடுப்பாகிறார்.

உடனே மீனாவின் குடும்பத்தை பற்றி தாழ்வாக பேச அண்ணாமலை கண்டிக்கிறார் முத்து மீனா வேண்டாம் என சொல்லியும் அண்ணாமலை எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லுகிறார் உடனே மனோஜ் ரோகினி இடம் நீங்க என்ன பண்ண போறீங்க என்று கேட்க நாங்க எதுக்கு பண்ணனும் என மனோஜ் சொல்லுகிறார் ரோகிணி பொண்ணுக்கு நான் பிரைடல் மேக்கப் போறேன் என சொல்ல மனோஜ் அமைதியாக இருக்கிறார் உடனே அண்ணாமலை நீ மிக்சி,கிரைண்டர் கொடுத்தது என்று சொல்ல பத்தாயிரம் ஆகும் பா என்று சொல்லுகிறார் பரவால்ல கொடு என்று சொன்னவுடன் விஜயா நல்ல வேலை ரெண்டு பொண்ணுங்களோட நிறுத்திட்டாங்க இல்லன்னா மாமனார் வீட்லயே எல்லாத்தையும் புடுங்கி கல்யாணம் பண்ணி இருப்பாங்க என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விடுகிறார். ஸ்ருதி கிச்சனுக்கு வர பின்னாலே வந்த ரோகினி ஸ்ருதியை நிக்க வைத்து கேள்வி கேட்கிறார்.

அன்னைக்கு நான் கேட்கும்போது பணத்தைக் கொடுக்கல ஆனா இப்போ மீனாவோட தங்கச்சிக்கு மூணு சவரன் செய்றேன்னு சொல்லி இருக்கீங்க அப்ப எனக்கு கேட்ட உதவி என்ன ஆச்சு என்று கேட்க நீங்க அவசரத்துக்கோ எமர்ஜென்சிக்கோ கேக்கல ஆன்ட்டிக்கு நீங்க பணம் கொடுக்கணும்னு அவசியமே கிடையாது நீங்க சொன்ன பொய்க்காக பயந்துகிட்டு அவங்க என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு இருக்கீங்க அதுக்காக நான் எப்படி கொடுக்க முடியும் அது நியாயமே இல்லையே என்று சொல்லுகிறார் அதே நான் இப்போ மீனாவோட தங்கச்சிக்கு கொடுத்தாலும் மீனா வேணான்னு தான் சொல்லுவாங்க இது நாங்களாக விருப்பப்பட்டு தான் செய்கிறோம் என்று சொல்லுகிறார். பிறகு மீனா வந்தவுடன் எதுக்கு சுருதி நாங்க பார்த்துக்கிறோம் மூணு சவரன் ரொம்ப அதிகமா இருக்கு என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல மீனா நான் ஒருவாட்டி சொன்னா கண்டிப்பா செஞ்சே தீர்வு என்ன சொல்லுகிறார்.பிறகு ஒன்றாக நகை எடுக்க போக முடிவு எடுக்கின்றன. பி ஏ ரோகிணிக்கு போன் போட்டு உனக்கு பயம் இல்லாம போயிடுச்சு நான் முத்துகிட்ட விஷயத்தை சொல்லிடுவேன் என மிரட்டுகிறார்.

நைட்டு தூங்கும் நேரத்தில் ரோகினிக்கு தூக்கம் வராமல் பி ஏ மிரட்டியதை நினைத்துக் கொண்டிருக்க வாய் தவறை சத்தமாக முத்து கிட்ட சொல்லிடக்கூடாது என்று சொல்லிவிட மனோஜ் எழுந்து விடுகிறார். உடனே ரோகினி தூங்குவது போல் செய்ய குடும்பத்தினர் அனைவரும் சத்தம் கேட்டு வந்துவிடுகின்றனர். பிறகு என்ன நடக்கிறது? ரோகினி என்ன சொல்லுகிறார்? மனோஜ் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 03-07-25
SiragadikkaAasai Serial Today Episode Update 03-07-25