நந்தினியை கடத்தியவரை கண்டுபிடிப்பாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா இப்படி எல்லாம் பண்ண மாட்டான் அந்த நந்தினி தான் அவளை ஏத்தி விட்டுருப்பா ஏதாவது பண்ணனும் என்று முடிவெடுத்து சுந்தரவல்லி ரூமுக்கு வருகிறார். உடனே சுந்தரவல்லி இருப்பதை பார்த்துவிட்டு நம்பர மாதிரி ஒரு ஆக்டிங்கை போற்ற வேண்டியது தான் என்று அழுது கொண்டே வந்து நான் ரொம்ப தப்பான பொண்ணா என்று கேட்கிறார். என் கேரக்டர் சரி இல்லையாம் என்று சூர்யா சொல்றான் இப்ப கூட என்னை கூப்பிட்டு வச்சு என்னென்னமோ திட்டறான் அவன் கூட சேர்ந்து அப்பாவும் திட்றாரு என்று சொல்ல,உடனே சுந்தரவல்லி நீ பண்ண தப்புக்கு திட்டாம என்ன பண்ணுவாங்க என்று சொல்ல உடனே சுரேகா பிளானை மாற்றி என்னை மட்டும் சொல்லல உங்களையும் சேர்த்து தான் திட்டினா என்று பேசி சுந்தரவல்லி உசுப்பேத்த அவன் என்ன திட்டுறது என்ன புதுசா விடு என்று சொல்லி விடுகிறார்.
அவன் தானா எல்லாம் பேசல அந்த நந்தினி உசுப்பேத்தி தான் பேசுறான். இத்தனை நாளா என்னை ஏதாவது திட்டி இருக்கானா என்ன பத்தியோ அக்காவை பத்தியோ அவன் கவலைப்பட மாட்டான் ஆனா இப்படி பேசுறானா என்ன காரணம் அவ தான் ஏத்தி விட்டு இருக்கா இப்படியே போனா சூர்யா இப்போதிக்கு விலகி தான் போறான் அப்புறம் அத்துவிட்டுவான் என்று சொல்ல சுந்தரவல்லி கோபமாக வெளியில் வருகிறார். மாதவியை கூப்பிட்டு நந்தினி வர சொல்லுகிறார். எங்கேயோ பட்டிக்காட்டில் இருந்து வந்த இங்க வந்து என்னென்னமோ பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க என்று சுந்தரவல்லி கோபப்படுகிறார். உடனே மாதவியும் உன்ன முதல்ல ஒன்னும் தெரியாத பொண்ணு என்று நெனச்சேன் ஆனா பண்றது எல்லாம் சகுனி வேலை என்று சொல்லுகிறார்.
அதற்கு நந்தினி நான் எதுவும் தெரிஞ்சு பண்ணல என்று சொல்ல அதுதான் எல்லாமே பண்ணிட்டியே என்று சுரேகா திட்டுகிறார். நீ ஏதோ ஒரு பிளானோட தான் இங்க இருக்க என்று மாதவி சொல்ல, அதற்கு சுரேகா இவ சூர்யாவை கைக்குள்ள போட்டுக்கிட்டு எல்லாரையும் காலி பண்ணிக்கிட்டு இருக்கா என்று சொல்ல நான் ஒதுங்கி இருக்கணும்னு தான் நினைக்கிறேன் என்று சொல்லி நீ ஒதுங்கி இருக்கியா எங்களை ஓரம் கட்டிக்கிட்டு இருக்க என்று சொல்லுகிறார். பணக்கார வீடு நான் நாலு பேர் வருவாங்க பழகுவாங்க அதுக்காக என் பையன தூண்டி ஏதாவது பண்ற வேலை வெச்சுக்கிட்டேனா அவ்வளவுதான் என்று மிரட்டுகிறார். சுரேகா நம்ப எவ்வளவு சொன்னாலும் அவ இந்த காதுல வாங்கி அந்த காதலை விட்டுருவா அவ எதுவும் கண்டுக்கமாட்டா என்று மாறி மாறி பேசிக்கொண்டே இருக்க நந்தினி எதுவும் பேச முடியாமல் இருக்கிறார்.
அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் வந்து மாதவி மற்றும் சுரேகாவை அனுப்பிவிட்டு சுந்தரவல்லி ரூமுக்கு வர சொல்லுகிறார். உன் பொண்ணு படிக்கிற வயசுல ரூம் வரைக்கும் ஒரு பையன கூட்டிட்டு வந்து இருக்கா அத கேக்குறதுக்கு உனக்கு இல்லாம,அவள புடிச்சு திட்டி கிட்டு இருக்க, அவன் கெஸ்ட் அவன போய் திருடன்னு சொன்னா கோபம் வராதா என்று சொல்ல கெஸ்ட் ஆயிருந்தா இருந்தா நேர் வழியில் வர வேண்டியதுதானே அதுவும் இல்லாம திருட்டுத்தனமா ரூம்ல உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கா, என்று கோபப்பட இதுவரைக்கும் நீ ஒரு மாமியாரா தான் தோத்துட்டு இருந்த ஆனா இப்போ ஒரு அம்மாவா தோத்து போயிட்ட என்று சொல்லுகிறார். அம்மாவா நான் தோத்துப் போயிட்டேனா என்று கேட்க அருணாச்சலம் ஆமாம் என்று சொல்லுகிறார். அவன திருடன் சொன்னதுக்கு உனக்கு கோவம் வருது அவன் திருட இல்லாமல் வேற என்ன, யார் அவன் அவனுக்காகவும் நீ எதுக்கு இவ்வளவு கோவப்படுற, சுரேகா பண்ண தப்புக்கு அவன் நந்தினியை கை காமிக்கிறா. பொண்ணுங்க பண்ற தப்பா கெட்டவங்க தான் சரி பண்ணனும், அவ பண்ணது தப்பே இல்லன்னு நீ பேசினால் அவளுக்கு எப்படி பயம் வரும். சுரேகா வந்து உன்கிட்ட சொன்னதாகவே இருந்தாலும் நீ போய் சண்டை போட்ட பாரு உன் மரியாதையா நீயே கெடுத்துக்காத என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
ரூமுக்கு வந்த நந்தினி அழுதுகொண்டே கடவுளின் போட்டோ முன் வந்து நிற்க நந்தினியின் கண்ணீரை சூர்யா கையில் வாங்குகிறார். நீ எதுக்காக அழற என்று எனக்கு தெரியாது ஆனா இதுக்கு காரணம் யாருன்னு எனக்கு தெரியும் என்று சொல்லுகிறார். ஆனா நான் ஒன்னு சொல்லுவேன் உன்னோட ஒரு சொட்டு கண்ணீருக்கு கூட இங்க யாருக்கும் தகுதி கிடையாது. இந்த வீட்ல தகுதியே இல்லாதவங்களுக்காக நீ கண்ணீர் சிந்தாத இப்ப தெரியுதா எங்க வீட்ல இருக்குறவங்கள ஏன் வெறுக்கிறேன்னு. நீங்க திட்டுங்க இல்ல தூக்கி வச்சு கொண்டாடுங்க தினம் தினம் தப்பே பண்ணாத விஷயத்துக்கு திட்டு வாங்கற தண்டனை ரொம்ப கொடுமை. இந்த நரகத்திலிருந்து தப்பிச்சிர மாட்டமான யோசிச்சுக்கிட்டு இருக்கேன். எதுக்கு நந்தினி இப்படி எல்லாம் பேசுற என்று கேட்க பாதிப்பு எனக்கு தான் சார், இப்ப கூட என்னோட அழுக வேதனை நான் என்ன நினைக்கிறேன் என்று கூட உங்களுக்கு தெரியுமானு தெரியல, நான் என்ன பண்ணா நீ கூல் ஆவ சொல்லு என்று கேட்க நான் என்ன சொன்னாலும் செய்வீங்களா என்று கேட்க செய்றேன் என்று சொல்லுகிறார். நீங்க ஒரு ஏழை பொண்ண காதலிச்சீங்க அதை உங்க அம்மா கெடுத்து விட்டாங்க அவங்கள பழிவாங்குறதுக்காக எனக்கு தாலி கட்டுனீங்க இப்போ உங்க அம்மா பழிவாங்கற அளவுக்கு என்ன யூஸ் பண்ணிக்கிட்டீங்க தயவுசெய்து என்னை விட்ருங்க இந்த ஒரு உதவி மட்டும் எனக்கு செய்றீங்களா என்று சொல்லி அழுகிறார்.
கொஞ்ச நேரம் இரு நந்தினி என்று சொல்ல அதற்கு நந்தினி நான் என்ன சொல்றேன் நீங்க என்ன பண்றிங்க என்று கேட்கிறார். நீ ரொம்ப டென்ஷனா இருக்க கொஞ்சம் கூலா இரு என்று சொல்ல,அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல சார். ஒரு பொண்ணோட வலி உங்களுக்கு தெரியாது என்னோட வலிய என்னோட வேதனையை யாரும் புரிஞ்சுக்க மாட்டீங்க என அழுது கொண்டே சொல்கிறார். அங்க போனா திட்றாங்க இங்க போனா திட்றாங்க நான் என்ன பண்றது என பேசிக்கொண்டே போக சூர்யா நந்தினி வாய் மீது விரல் வைத்து அமைதியாக இருக்க சொல்லுகிறார். அதையும் மீறி நந்தினி பேச வர நான் கையெடுக்க மாட்டேன் ஃபர்ஸ்ட் மூச்ச ரிலாக்ஸா இழுத்து விடு என்று பண்ணி காட்டுகிறார். ஆனால் முதலில் நந்தினி செய்யாமல் அழ பிறகு சூர்யா செய்ய வைக்கிறார். மூச்சை உள்ளே இழுத்து ஸ்லோவா வெளியே விடு அப்பதான் நான் கை எடுப்பேன் என சொல்லிவிடுகிறார். நந்தினியும் அதேபோல் செய்ய இப்போ ரிலாக்ஸா இருக்கா மனசு நிம்மதியா இருக்கா, என்று சொல்லிவிட்டு மீண்டும் செய்ய சொல்லுகிறார். என் கஷ்டம், என் தூக்கம்,வேதனை துக்கம் எல்லாம் இதோட போயிடுச்சு என்று நெனச்சுக்கோ மூச்சை நல்லா இழுத்து விடு என்று சொல்ல, அதான் பண்ணிட்ட இல்ல விடுங்க சார் என்று சொல்ல இன்னும் ஒரு வாட்டி எனக்காக என்ன கூட சேர்ந்து பண்ணு என்று சொல்லி பண்ண வைக்கிறார். இப்ப எப்படி இருக்கு ஓகே தானே என்று சொல்லுகிறார். எனக்கு அந்தப் பிரச்சினையை விட நீங்க சொல்லிக் கொடுத்தது தான் எனக்கு படபடப்பா இருக்கு என்று சொல்லுகிறார். இனிமே அழக்கூடாது ஃபீல் பண்ணக்கூடாது. யாராவது எதனா சொன்னா என்கிட்ட சொல்லு இல்லன்னா நீ திருப்பி திட்டு நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா மற்றும் அருணாச்சலம் இருவரும் நந்தினி இடம் ரெசார்ட்டில் யார் கடத்தினாங்க என்று பார்த்து சொல்லு என சிசிடிவி ஃபுட் விஜய் காண்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
உடனே ரேணுகா சாம்பார் பருப்பு அடி பிடிச்சிருச்சு புளி குழம்பு என என்னென்னமோ சொல்லி நந்தினியை கூப்பிட்டு போக பார்க்க சூர்யா புளிக்குழம்பு, கரடி குழம்பு, கார குழம்பு எதுனாவை நந்தினி கூப்பிடாத என அனுப்பி விடுகிறார் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும்போதே பேட்டரி லோவ் ஆகிவிடுகிறது இதனால் திருடர்களை சரியாக பார்க்க முடியாமல் இருக்கிறது என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்
