சுதாகருக்கு சவால் விட்ட பாக்யா, ஈஸ்வரி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
சுதாகருக்கு பாக்யா சவால் விட ஈஸ்வரி முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

baakiyalakshimi serial today episode update 28-03-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரண்ட்க்கு சிலர் வந்து பாக்யாவிடம் சுதாகர் சார் இந்த ரெஸ்டாரன்ட் வாங்க சொல்லி இருக்காரு என்று சொல்ல பாக்கியலட்சுமி இது என்னோட ரெஸ்டாரன்ட் யாருக்கோ கொடுக்க எனக்கு விருப்பம் இல்ல இங்க இருந்து கிளம்புங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் உடனே அவர் சுதாகரை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்ல எவ்வளவு பணம் கொடுக்கிறேன்னு சொன்னீங்க என்று கேட்கிறார் பணத்தை பத்தி பேசல என்று சொல்ல ஒரு பொருளை வாங்கினால் சும்மா கொடுப்பாங்களா? பணம் கொடுக்கிறேன் என்று சொல்லி கேட்டு பாருங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த ரெஸ்டாரன்ட் பணம் கொடுத்தாலும் கொடுக்க மாட்டேன்னு சொல்றாங்கன்னு ஒரு கதைய சொல்லிட்டு வராதீங்க எனக்கு அந்த ரெஸ்டாரன்ட் வேணும் என்று வார்னிங் கொடுத்து அனுப்புகிறார்.
மறுபக்கம் ரெஸ்டாரண்டில் ஏழில் பாக்யாவிடம் பேசிக்கொண்டிருக்க இன்னொரு படத்தின் பூஜை இன்னும் ரெண்டு வாரத்துல ஸ்டார்ட் ஆக போகுது என்று சொல்ல பாக்யா சந்தோஷப்படுகிறார் பக்கத்தில் இருக்கும் செல்வி இடம் ஆகாஷ் எப்படி இருக்கான் என்று கேட்க இருக்கான் தம்பி அவனை பத்தி கேட்காதீங்க எனக்கு அழுக வந்துரு என்று சொல்லுகிறார் நானே நிறைய பெயிலியர் பார்த்து தான் அக்கா வந்து இருக்கேன் கண்டிப்பா அவனும் ஒரு நாள் ஜெயிப்பான் என்று சொல்லிக் கொண்டிருக்க, சுதாகர் ஆட்கள் மீண்டும் ரெஸ்டாரண்டுக்கு வருகின்றனர்.
பாக்கியா உங்களுக்கு அப்பவே வர வேணாம்னு சொன்ன இல்ல இப்ப எதுக்கு வந்திருக்கீங்க என்று சொல்ல இந்த ரெஸ்டாரன்ட் எங்க சுதாகர் சாருக்கு வேணும் நீங்க எவ்வளவு காசு வேணாலும் வாங்கிக்கோங்க டீல் போட்டுக்கலாம் என்று சொல்ல உடனே ஏழில் என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கோபப்பட பாக்யா நீ அமைதியா இரு எழில் என்று சொல்லிவிட்டு நீங்க கோடி கோடியா கொடுத்தாலும் இந்த ரெஸ்டாரன்ட் கொடுக்க முடியாது இன்னும் பேசிகிட்டு இருந்தீங்கன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டுவேன் என்று சொல்ல அவர்கள் கிளம்பி விடுகின்றனர்.
செழியன் ஈஸ்வரி மற்றும் கோபியை சந்தித்து அவர்கள் இருக்கும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஈஸ்வரி கோபி இடம் இனியா விஷயமா தரகர்கிட்ட பேசினியா என்று கேட்கிறார். அதெல்லாம் இப்ப வேணாமா நம்ம மேட்ரிமோனியில் பண்ணிக்கலாம் அங்கேயும் நிறைய வரேன் வரும் வசதியான இடத்துல கட்டி கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்று சொல்லுகிறார்செழியன் இனியா கிட்டயும் அம்மாகிட்டயும் சொல்ல வேண்டாமா என்று கேட்க எதுவும் சொல்ல வேணாம் இதெல்லாம் முடிச்சுட்டு சொல்லிக்கலாம் என்று சொல்லுகின்றனர்.
பாக்கியா வீட்டில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க சுதாகர் அவர்கள் குழுவுடன் பாக்யா வீட்டுக்கு வருகிறார். பாக்கியாவிடம் நான் யாருன்னு தெரியுதா என்று கேட்க தெரியல என்று சொல்லுகிறார் என்னோட குரூப்ப வச்சு கண்டுபிடிச்சு இருப்பீங்கன்னு நினைச்சேன் நான்தான் சுதாகர் உங்க ரெஸ்டாரன்ட் வாங்க சொன்னேன் என்று சொல்லுகிறார் அதுதான் உங்க ஆள் கிட்ட சொல்லி அனுப்பிட்டோனே கொடுக்க முடியாதுன்னு அப்புறம் என்ன என்று சொல்ல எனக்கு 5 கிலோ மீட்டர்ல ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கணும்னு ஒரு ஆசை இருக்கு அதனால இந்த ஏரியாவுல தேடிப் பார்த்த எந்த இடமும் கிடைக்கல அதனால உங்க ரெஸ்டாரன்ட் எங்களுக்கு வேணும் என்று சொல்ல என்னால கொடுக்க முடியாது.
எனக்கு ரெண்டு ரெஸ்டாரன்ட் தான் இருக்கு அதுல ஒன்னும் வாடகை இது மட்டும் தான் என்னோட சொந்த உழைப்பில் நான் கஷ்டப்பட்டு உருவாக்கினது அதை எப்படி ஈஸியா தூக்கி கொடுக்க முடியும் என்னால் கொடுக்க முடியாது என்று சொல்லுகிறார். நான் உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் கொடுக்கிறேன் என்று சொல்லியும் பாக்கியா சம்மதிக்காததால், என்ன பத்தி உங்களுக்கு தெரியாது என்று சொல்ல உங்கள மாதிரி நிறைய பேரை பார்த்து நிறைய சவால் நிறைய பிரச்சினையை தாண்டித்தான் நான் இந்த ரெஸ்டாரன்ட் வச்சிருக்கேன் உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க வெளியே போங்க என அனுப்பி வைக்கிறார்.
பிறகு சுதாகர் பாக்யாவிடம் ரெஸ்டாரன்ட் வாங்க என்ன திட்டம் போடுகிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 28-03-25