அம்மா மற்றும் மனைவிக்காக மதுரை முத்து செய்த செயல்.. கண்கலங்க வைத்த பதிவு இதோ..!
அம்மா மற்றும் மனைவிக்காக மதுரை முத்து செய்த செயல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் காமெடியில் தன் திறமையை காட்டி நகைச்சுவையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இரண்டாவது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார்.. தற்போது கலக்கப்போவது யாரு சீசன் 10 நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்று வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் நிஷா, மதுரை முத்து அவர்கள் மனைவி மற்றும் அம்மாவிற்காக கோவில் கட்டி வருவதாக கூறியுள்ளார். இது குறித்து மதுரை முத்து பேசுகையில், அவரது முதல் மனைவி ஒரு கார் விபத்தில் உயிரிழந்ததால் அவரது தோழியான நீத்து என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மதுரை முத்து தற்போது முதல் மனைவி மற்றும் பெற்றோரின் நினைவாகத்தான் இந்த கோவிலை கட்டி முடித்துள்ளார் இன்னும் பத்து நாட்களில் அதற்கு திறப்பு விழா இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு அரங்கத்தில் இருப்பவரை கண்கலங்க செய்துள்ளது. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram