குடும்பங்கள் கொண்டாடும் ‘குடும்பஸ்தன்’ படம்; ஓடிடி.யில் ரிலீஸ்
குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கத்தக்க வகையில் வந்த ‘குடும்பஸ்தன்’ பட ஓடிடி வெளியீடு பற்றிப் பார்ப்போம்..
தமிழ் சினிமாவில் திரில்லர் சீசன் இன்னும் முடியவில்லை. இதனிடையே வெளிவந்து வரவேற்பு பெற்ற குடும்பம் படம் ‘குடும்பஸ்தன்.’
இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே. மணிகண்டன் மற்றும் குரு சோமசுந்தரம் ஷான்வி மேக்னா நடித்துள்ளனர். நடைமுறை வாழ்க்கையில் நிகழும் காமெடி கொண்டாட்டமாக இப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஹீரோ-நவீன் ஒரு கிராபிக் டிசைனர். வேலை இழந்து பிறகு, அவனது மனைவி வெண்ணிலா கர்ப்பமாக இருப்பதை தெரிந்து பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறார்.
வேலையிழப்பு, கடன் சிக்கல்கள், குடும்ப பிரச்சினைகள் என அனைத்தும் சேர்ந்து நவீனின் வாழ்க்கையை மாற்றுகிறது. இதனால் நவீன் எடுக்கும் மோசமான முடிவுகள், தோல்வியுற்ற சொந்தத்தொழில் முயற்சிகள், அதனுடன் குடும்பத்தில் வரும் அதிர்ச்சியான தருணங்கள் எல்லாவற்றையும் நவீன் எப்படி சமாளிக்கிறான் என்பதை விறுவிறுப்பு குறையாமல் நகைச்சுவையாக சொல்கிறது.
திரையரங்குகளில் வெற்றி பெற்ற ‘குடும்பஸ்தன்’ படம் வரும் மார்ச் 7-ம் தேதி முதல் ஓடிடி.யில் கண்டு களிக்கலாம்.