திரையரங்குகளில் நாளை வெளியாகும் ஐந்து திரைப்படங்கள்..நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்!!
திரையரங்குகளில் நாளை 5 திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

வெள்ளிக்கிழமை என்றாலே புதிய படங்கள் வெளியாவது வழக்கம். அதிலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாக போகும் 5 படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் “டி என் ஏ”. இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில், தனுஷ் நடிப்பிலும் நாளை திரையரங்குகளில் “குபேரா” என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. நாகார்ஜுனா ரஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அனிமேஷன் திரைப்படமான “எலியோ” என்ற திரைப்படமும் நாளை வெளியாக உள்ளது.
இயக்குனர் ஆர்.எஸ் பிரசன்னா இயக்கத்தில் “சித்தாரே ஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது அமீர்கான் ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஐந்தாவதாக இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ள “சென்ன சிட்டி கேம் ஸ்டார்ஸ்” என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது இந்த படத்தில் அதுல்யா ரவி, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நாளை வெளியாக உள்ள இந்த ஐந்து திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
