சமந்தாவும் திரிஷாவும்: இணையதள வாதம், வைரல்
நடிகை சமந்தா, தன் கழுத்தில் இருந்த YMC அதாவது ‘ஏ மாய சேசசாவே’ படத் தலைப்பு டாட்டூவை அண்மையில் நீக்கிவிட்டார்.
அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோவில் YMC டாட்டூவை காணோம். இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலிப்பதால் கடந்த கால நினைவுச் சின்னம் வேண்டாமென்று டாட்டூவை நீக்கிவிட்டார் போன்று என ரசிகர்கள் பேசினார்கள். ஆனால் சமந்தா அதை கண்டுகொள்ளவில்லை.
ஏ மாய சேசாவே குறித்து சமந்தா கூறியதாவது, ‘அந்த படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட அனைத்து காட்சியும் இன்னும் அப்படியே நினைவிருக்கிறது. ஜெஸியை பார்க்க கேட்டில் கார்த்திக் காத்துக் கொண்டிருக்கும் காட்சியை தான் முதலில் படமாக்கினார் கவுதம் மேனன். அவர் இயக்கத்தில் நடித்ததில் ரொம்ப சந்தோஷம் என தெரிவித்தார்.
ஏ மாய சேசாவே ரீ ரிலீஸ் குறித்து அறிந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ரசிகர்களோ மீண்டும் திரிஷா, சமந்தா நடிப்பை ஒப்பிட்டு பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
சவுத் குயின் அளவுக்கு சமந்தாவால் நடிக்க முடியவில்லை என மீண்டும் அதே பாயிண்ட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தக் லைஃப் படத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு, திரிஷாவை சேர்த்து வைக்காமல் போய்விட்டார் இயக்குநர் மணிரத்னம் என்கிறார்கள்.