மீண்டும் அஜித்-யுவன் கூட்டணி: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Web Ads

அஜித்தின் அடுத்த படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளாரா? என பார்ப்போம்..

‘தல’அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர் யுவன் ஷங்கர் ராஜா. தீனா படத்தில் துவங்கி வலிமை படம் வரை அஜித்தின் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன்.

ஆனால், சமீபகாலமாக அஜித்தின் படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவில்லை. இந்நிலையில் தற்போது அஜித் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா சந்தித்து இருப்பதால், மீண்டும் இவர்களது கூட்டணி இணையுமா ? என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

அஜித்தை சந்தித்தது குறித்து யுவன் ஷங்கர் ராஜா தன் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். AK வை சந்தித்தது சந்தோஷம் என்றும், கார்களை பற்றி இருவரும் பேசிக்கொண்டு இருந்ததாகவும் தன் பதிவில் போட்டிருந்தார்.

துணிவு, விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அஜித்தின் கடைசி மூன்று படத்திற்கு வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். இந்த மூன்று படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக தான் இருந்தது. குறிப்பாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் சிறப்பான பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்திருந்தார். ஆனாலும் ரசிகர்கள் அஜித் -யுவன் காம்போவை மிஸ் செய்வதாக கூறி வருகின்றனர்.

தீனா, பில்லா, மங்காத்தா, ஆரம்பம் என இவர்கள் கூட்டணியில் வெளியான படங்களின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆதிக் தான் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் என்றால், அப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் தான் இசையமைப்பாளராக இருப்பார் எனவும் தெரிகின்றது. .

தீனா படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை அஜித் வழங்கினார். அஜித்தின் நம்பிக்கையை காப்பாற்றிய யுவன் அன்றிலிருந்து அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறினார். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தவர் அஜித். இதனை யுவன் ஷங்கர் ராஜாவே பலமுறை பல பேட்டிகளில் மிகவும் நெகிழ்ச்சியாக கூறி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

recent meeting of ajithkumar and yuvan shankar raja