இந்த வாரம், தியேட்டர்-ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள்
இந்த வார இறுதியில் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் ரிலீஸாகும் படங்கள் விவரம் பார்ப்போம்..
ஜூன் 20-ந்தேதி தனுஷ் நடித்த ‘குபேரா’ படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக நடிகர் அதர்வா நடித்துள்ள டிஎன்ஏ படமும் ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். இதில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இதுதவிர நடிகர் வைபவ் நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர் என்கிற காமெடி திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் அதுல்யா ரவி ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஓடிடியில் இந்த வாரம் யோகிபாபு நடித்த ஜோரா கைய தட்டுங்க என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதுதவிர பிரபு நடித்த ராஜபுத்திரன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கலியுகம் ஆகிய திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ஜூன் 20-ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.
மேலும், முகென் ராவ் நடித்த ஜின் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஜூன் 20-ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதனுடன் சேவ் நல்ல பசங்க மற்றும் யுகி ஆகிய இரண்டு திரைப்படம் ஜூன் 20-ந் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பைனல் டெஸ்டினேஷன் பிளெட்லைன்ஸ் என்கிற ஹாலிவுட் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் கேரளா கிரைம் பைல்ஸ் சீசன் 2 என்கிற வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. அதேபோல், திலீப் நடித்த பிரின்ஸ் அண்ட் பேமிலி திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஜூன் 20ந் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
தெலுங்கில் கொல்லா என்கிற திரைப்படம் ஈடிவி வின் ஓடிடி தளத்திலும் இந்தியில் சிஸ்டர் மிட்நைட் என்கிற படம் அமேசான் பிரைமிலும் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.