Web Ads

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் ஹெச்.வினோத்?

சூப்பர் ஸ்டார் ரஜினியும் இயக்குனர் ஹெச்.வினோத்தும் இரண்டு முறை சந்தித்து பேசியிருக்கிறார்கள். இதனால், விரைவில் இருவரும் புதிய படத்தில் இணைவார்கள் எனத் தெரிகிறது.

நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்குப் பிறகு, யாருடைய இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

தற்போது ரஜினி – ஹெச்.வினோத் இருவரும் சந்தித்த நிகழ்வு காரணமாக இருவரும் இணைந்து படம் பண்ண வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. முன்பே இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஆனால், சில காரணங்களால் இந்தக் கூட்டணி இணைய முடியாமல் போனது.
தற்போது இணைய வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.

விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படத்தினை இயக்கி வருகிறார் ஹெச்.வினோத். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தைத் தொடர்ந்து ரஜினி படத்தினை இயக்குவார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

rajinikanth and h vinoth will join hands in a new film