‘வீர தீர சூரன்’ படம் எப்படி?: இரண்டு வரியில் தயாரிப்பாளரின் ரிவ்யூ

ஓவர் புரோமோ படத்துக்கு ஆகாது என்பது ‘கங்குவா’ கற்றுத் தந்த படமோ பாடமோ என்னவோ.! ‘வீர தீர சூரன்’ பட பற்றி தயாரிப்பாளரே குறள் போல சுருக்கமாக குரல் கொடுத்துள்ளார்; காண்போம்..

அதாவது, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்திருக்கும் அருண்குமாருடன் கூட்டணி வைத்திருக்கிறார் விக்ரம். அருண் இயக்கிய 3 படங்களும் வரவேற்பை பெற்றன. ‘சேதுபதி’ படம் கமர்ஷியல் ரீதியாகவும், சித்தா விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாகவும் வரவேற்பு பெற்றன.

எனவே, விக்ரமை வைத்து அவர் இயக்கியிருக்கும் ‘வீர தீர சூரன்’ ரசிகர்களை கவரும் என நம்பப்படுகிறது. இப்படம் வருகிற 27-ம் தேதி ரிலீஸாகிறது.

விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு மற்றும் சுராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்த தயாரிப்பாளர் அருண் விஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில்,

‘எஸ்.யு. அருண்குமாரின் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது புரோமோஷனுக்காக போடப்பட்ட போஸ்ட் இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவ்வகையில் இந்த முதல் ரிவ்யூ பாஸிட்டிவ் சென்டிமென்டுக்காக சொல்லப்பட்டாலும், இயக்குனர் அருணின் கதைக்களம் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆதலால், இப்படமும் வரவேற்கப்படும் என தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.!