அனிருத் தொடர்ந்து மறுப்பு; சிம்புவின் நியூ ப்ளானிங்
சிம்பு நடிக்கும் படங்களின் இசை பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
எஸ்டிஆர் 49 படத்திற்கு இசையமைக்க அனிருத்தை அணுகியபோது கூலி, ஜெய்லர் 2, நானி படம் என பிஸியாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டார். எஸ்டிஆர் 50 படத்திற்கு யுவன் இசை என்பது உறுதியாகிவிட்டது. இதனையடுத்து, எஸ்டிஆர் 51 படத்திற்கு அனிருத் இசையமைக்க கேட்டதற்கும் மறுத்துவிட்டார். நண்பரான சிம்புவுக்கு செம அப்செட்.
2016-ல் வெளியான ‘பிரேக் அப்’ பாடலின் சர்ச்சையால் தான் இசையமைக்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும், தற்போது ரஜினி படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து நல்ல பெயரை தக்க வைக்கும் எண்ணத்திலும், மீண்டும் எஸ்டிஆர் உடன் இணைந்து சர்ச்சையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘கட்சி சேர’ ஆல்பம் மூலம் பிரபலமான சாய் அபயங்கர் தற்போது சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். இப்போது, கோலிவுட்டில் அனிருத் இல்லையென்றால், சாய் என தொடங்கிவிட்டனர். அவ்வகையில் STR 49 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சாய் கைவசம் நான்கு படங்கள் உள்ளன. இவரும் பிஸிதான். சிம்பு-சாய் புதிய கூட்டணி எப்டி தெறிக்கும் என ரசிகர்களும் ஆவலாய் உள்ளனர். பார்க்கலாம்..!