ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்

விவாகரத்து வழக்கு தொடர்பாக, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இது பற்றிய தகவல்கள்..

இசையமைப்பாளர், நடிகர் என பயணித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்களில் சிகப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம், பேச்சிலர் உள்ளிட்ட படங்கள் மட்டுமே அவருக்கு ஓரளவு நல்ல பெயரை கொடுத்தது. பாலாவின் இயக்கத்தில் நடித்த ‘நாச்சியார்’ படம் எதிர்பார்த்த அளவில் திருப்தியில்லை.

அண்மையில், இவரது தயாரிப்பில் நடித்து வெளியான ‘கிங்ஸ்டன்’ படமும் சரியாக போகவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தும் அவர், இப்போது அதிக படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார்.

அவ்வகையில், அமரன், லக்கி பாஸ்கர் படங்களை தொடர்ந்து, அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி, விக்ரம் நடித்திருக்கும் வீர தீர சூரன் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
மேலும், அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்துக்கும் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே காதலித்து திருமணம் செய்துகொண்ட சைந்தவியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார். பிரிவதாக அறிவித்திருந்தாலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கேட்டு இரண்டு பேரும் நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்யாமல் இருந்தார்கள்.

இச்சூழலில், இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகி தங்களுக்கு டைவர்ஸ் வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இரண்டு பேருமே ஒரே காரில் மீண்டும் சென்றார்கள்.

இந்நிலையில், முன்னதாக தனது மகள் குறித்து சைந்தவி பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. ‘எனது குழந்தையை விட்டுவிட்டு நான் வேலைக்கு வந்த பிறகு, கொஞ்ச நேரம் அன்வி என்னை தேடுவாள். பிறகு விளையாட்டு, பொம்மை என்று சென்றுவிடுவாள்.

ஆனால், எனக்குதான் அய்யோ குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்று தோன்றிக்கொண்டே இருக்கும். ஆகினும் நான் இல்லாதபோது என்னை தேடமாட்டார். ஆனால், இருக்கும்போது எல்லா வேலையையும் வாங்கிடுவாங்க’ என்றார்.