ஒடிடி.யிலும் மாஸ் காட்டும் ‘லக்கி பாஸ்கர்’: படக்குழுவினர் உற்சாகம்
துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் ஓடிடி.யிலும் வெளுத்து வாங்கி, ட்ரெண்டாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்..
நடிகர் துல்கர் சல்மான் லீட் கேரக்டரில் நடித்து கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியான ‘லக்கி பாஸ்கர்’ உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி மாஸ் காட்டியது.
தமிழில் அமரன், பிளடி பெக்கர், பிரதர் படங்கள் தீபாவளி ரிலீசாக வெளியான நிலையில், அமரன் படத்திற்கு அடுத்தபடியாக ரசிகர்களை சிறப்பாக கவர்ந்திருந்தது லக்கி பாஸ்கர்.
படத்தில் வங்கி ஊழியராக துல்கர் சல்மான் நடித்திருந்தார். அவரது அதிரடியான நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டு இருந்தது. படத்தில் மீனாட்சி சவுத்ரியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ஒரு குழந்தைக்கு அம்மாவாக மீனாட்சி சவுத்ரி நடித்திருந்த போதிலும், அவருக்கு படத்தில் நடிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் காணப்பட்டன. அதை அவர் சிறப்பாகவே பயன்படுத்தியிருந்தார்.
படத்தின் இசையை ஜிவி பிரகாஷ் மேற்கொண்ட நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் சிறப்பான கவனத்தை பெற்றிருந்தன. தமிழில் அமரன் படத்தையடுத்து லக்கி பாஸ்கர் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிநடை போட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் 28ம-ம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் படத்தை ஓடிடியிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ஓடிடியில் வெளியான லக்கி பாஸ்கர் படம் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ட்ரெண்டிங்கில் உள்ளது. படம் 15 நாடுகளில் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷின் வாத்தி படத்திற்கு அடுத்ததாக லக்கி பாஸ்கர் படம் வெளியான நிலையில், படம் இயக்குநருக்கும் நடிகருக்கும் மட்டுமில்லாமல் மீனாட்சி சவுத்ரிக்கும் மிகச் சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் காட்சிகளை தற்போது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஆக, ஓடிடி.யிலும் லக்கி படக்குழுவுக்கு செம லக் கிட்டிருச்சு. இனி, அடுத்த பட வேலையை உற்சாகமாக ஆரம்பிக்கலாம்.