சல்மான்கான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் பட்ஜெட் மட்டும் ரூ.250 கோடி; அட்லியின் தகவல்கள்
தமிழில் மௌனராகம் படத்தை தழுவி, வேற லெவல் மேக்கிங்கில் ‘ராஜா ராணி’ என்ற ஹிட் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் அட்லி.
பின்னர், தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து தளபதி விஜய்க்கு நெருங்கிய தம்பி ஆனார்.
அடுத்த அதிரடியாக பாலிவுட் சென்று ‘ஜவான்’ என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக்கானுக்குக் கொடுத்தார். 1000 கோடி ரூபாய் கலெக்ஷன் பெற்று படம் சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். பின்னர், அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி கைவிடப்பட்டது.
இதையடுத்து, அவர் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும், அதற்கான திரைக்கதை வேலைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், படத்தில் சல்மான்கானோடு கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்தை நடிக்க வைக்கவும் அட்லி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். கமலின் கால்ஷீட் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தை 9 மொழிகளில் உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், முன்னணி நடிகர்களின் சம்பளம் எல்லாம் இல்லாமல், ஷூட்டிங் பட்ஜெட் மட்டும் 250 கோடி ரூபாய் ஆகும் என தயாரிப்புத் தரப்புக்கு அட்லி கூறியுள்ளார்.
இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்.. குருவை மிஞ்சிய சிஷ்யன் என்பதுபோல, இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக முன்பு பணியாற்றிய அட்லிக்கு, தற்போது சம்பளம் 100 கோடி ரூபாய். ஆசானுக்கு இதைவிட சற்று குறைவு தான்ங்க.