‘முஃபாசா’ கேரக்டரில் கர்ஜிக்கும் மகேஷ் பாபு: ‘தி லயன் கிங்’ படம், ரசிகர்கள் எதிர்பார்ப்பு..
அறிவியல் மயமான வாழ்வினில், அனிமேஷன் மிக்ஸிங்கில்.. அனிமல்ஸ் பற்றிய திரைப்படங்களுக்கு உலக அளவில் செம வரவேற்பு உண்டு. பெரிய வசூலும் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இப்படங்கள் வசீகரிக்கும்.
அவ்வகையில், உருவாகி அன்று வெளியான ‘முஃபாசா தி லயன் கிங்’ ஹாலிவுட் படம், அப்போதே இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்த படத்தின் லைவ் ஆக்ஷன் படமாக 2019-ம் ஆண்டு உலக அளவில் ரிலீஸானது.
இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக தற்போது இப்படத்தின் வில்லன் கேரக்டரான ”முஃபாசா” பற்றி விரிவாக கதையாக்கப்பட்டு உள்ளது.
அர்ஜூன் தாஸ், நாசர், ரோபோ சங்கர், சிங்கம் புலி, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் ஒவ்வொரு கேரக்டருக்கும் குரல் கொடுத்துள்ளனர். இப்படம், வருகிற 20-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.
‘தி லயன் கிங்’ படத்தின் பிரத்யேகமான புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், மகேஷ் பாபு புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
அதாவது, தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, ‘முஃபாஸா’ கேரக்டருக்கு டப்பிங் கொடுத்துள்ளார். 20-ம் தேதி தெலுங்கில் வெளியாகிறது.
மகேஷ் பாபு முஃபாசாவாகவும், பிரம்மானந்தம் பும்பாவாகவும், டைமோனாக அலியும், சத்யதேவ் டாக்காவாகவும், அய்யப்பா பி ஷர்மா கீரோஸாகவும் குரல் கொடுத்துள்ளனர். இந்த தகவல், ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்துடன் தியேட்டர் சென்று குதூகலிக்க டிக்கெட் முன்பதிவை எதிர்பார்த்துள்ளனர். எப்போதுமே மாறுபட்ட ஒரு கலைப்படைப்பு, அனைவரையும் கவரும் , கலெக்ஷனையும் குவிக்கும் தானே.!