ரஜினியின் 173-வது படத்தை இயக்குகிறார் சிபி சக்ரவர்த்தி..

Web Ads

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

முன்னதாக, ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. கமல் தயாரிக்க அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து திடீரென விலகினார் சுந்தர்.சி. இதனால், இப்படத்தின் இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.

ரஜினியின் 173-வது படத்துக்காக ‘மகாராஜா’ படத்தை இயக்கிய இயக்குநர் நித்திலன் மற்றும் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் ஆகியோர் கதைகள் கூறினார்கள். இந்த இருவரில் ஒருவர் தான் இயக்குநராக இருப்பார் என்று பேசப்பட்டது.

இதன் இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பை இன்று காலை 11 மணியளவில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக அறிவித்தது. இதனால், ரஜினி 173 மீது எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. சரியாக 11 மணிக்கு அறிவிப்பும் வெளியானது. ஆனால், யாரும் அதிகம் கணிக்காத சிபி சக்ரவர்த்தி இயக்குநராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ கவனம் ஈர்த்தது. இந்தப் படத்தின் வெற்றியால் சிபி சக்ரவர்த்தி பரவலாகப் பேசப்பட்டார். ரஜினி தற்போது ’ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் .

அதனை முடித்துவிட்டு கமல் தயாரிக்கும் தனது 173-வது படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். அதன் இயக்குநரும் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி 173 படத்தை தொடர்ந்து ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தினை நெல்சன் இயக்குவது உறுதியாகி இருக்கிறது.

director cibi chakaravarthi to direct rajini 173
director cibi chakaravarthi to direct rajini 173