இசையமைப்பாளரான பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ்

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் மகளும், பின்னணிப் பாடகியுமான ஜனனி பரத்வாஜ், தற்போது இசையமைப்பாளராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
25-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் பாடியுள்ள ஜனனி, ‘அசல்’ படத்தின் ‘Tottadaing’, ‘ஐயா’ படத்தின் ‘Athiri Pathiri’, ‘பள்ளிக்கூடம்’ படத்தின் ‘Indha Nimidam’, ‘பிறப்பு’ படத்தின் ‘Ulaga Azhagi Naan Dhan’ உள்ளிட்ட பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.
தற்போது கனடாவில் வசித்து வரும் ஜனனி, பின்னணிப் பாடகியாகத் தனது திறமையை வெளிப்படுத்தியதுடன், சுயாதீன இசை உலகிலும் தடம் பதிக்கத் தயாராகியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, Divo Music நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் சுயாதீன இசைப் படைப்பை உருவாக்கி வருகிறார். இந்த முயற்சியின் மூலம் இசையமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுக்கிறார் ஜனனி.
அவரது புதிய இசைப் பயணம் குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
