தேனிசைத் தென்றல் தேவா மறைவு: முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல்!

Web Ads

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், கானா பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான தேனிசைத் தென்றல் தேவா மறைவுக்கு, தமிழக முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தேவாவின் மறைவுச் செய்தி தமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் ரசிகர்களைக் கவர்ந்தவர் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற தேவாவின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்றும், அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Web Ad 2

தேவாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.