லோன் வாங்கி கார் வாங்காதீங்க… மாட்டிக்குவீங்க! – நடிகர் அப்புக்குட்டி அட்வைஸ்!

Web Ads

‘பண்டமாற்று’ குறும்பட விழாவில் பேசிய நடிகர் அப்புக்குட்டி, கார் வாங்குவதற்காகக் கடன் பெறுவது மற்றும் வட்டிக்குப் பணம் வாங்குவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “‘பண்டமாற்று’ படத்தின் கதை வட்டிக்குப் பணம் வாங்குவது, கார் அடமானம் வைப்பது, அதனால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. நானும் எனது காரை அடமானம் வைத்து அவதிப்பட்டிருக்கிறேன்.

எல்லா நடிகர்களும் வசதியானவர்கள் கிடையாது. 10 சதவீத நடிகர்கள் மட்டுமே வசதியாக இருக்கிறார்கள். ஒரு மாதம் வருமானம் வரும்; பல மாதங்கள் வருமானம் இல்லாமல் போகும். அதனால் நடிகர்களே, கடன் வாங்கிக் கார் வாங்காதீர்கள். அப்படிச் செய்தால் சிக்கிக்கொள்வீர்கள். என்னுடைய சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்” என்று அப்புக்குட்டி தெரிவித்தார்.

‘பண்டமாற்று’ குறும்பட விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ராசி அழகப்பன், நடிகர் அப்புக்குட்டி, நடிகர் காதல் சுகுமார் மற்றும் இயக்குநர் இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Web Ad 2

புஷ்வானம் டாக்கீஸ் சார்பில் கண்ணன் சாவித்திரி கதை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் கண்ணன் சாவித்திரி, ஜெயசுதா, பாட்ஷா மற்றும் மகாலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை பாண்டி அருணாசலம் மேற்கொண்டுள்ளார். அர்ஜுன் வி. அகஷயா இசையமைத்துள்ளார். படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.

குறும்படமாக உருவாகியுள்ள ‘பண்டமாற்று’ விரைவில் முழுநீளத் திரைப்படமாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.